தனிமையிலே
மாலையும் வந்தாளே!-இந்த
மங்கைபடும் பாடு சொல்லி மாளவில்லையே!
தண்ணிலவும் வாட்டுதடி--வான்
தாரகைகளும் கண்சிமிட்டி
கேலிகளும் செய்யுதடி!-எந்தன் மேலே
தென்பொதிகை தென்றலுமுமே
தீ” நெருப்பை அள்ளி வீசுதடி!--தனிமையிலே
மாலையும் வந்தாளே!-இந்த
மங்கைபடும் பாடு சொல்லி மாளவில்லையே!-தலைவன் அவனை
கூடாவிட்டாலும் பரவாயில்லையென்று-அந்த காதல் மன்னனை
தூர நின்று பார்த்தாலே போதுமென்று-அதனாலே மனதினிலே
தோன்றும் நிம்மதியென்று--காதல் தலைவியே!
மயக்கும் மாலைப் பொழுதினில் கலங்கி
மயங்கி தயங்கி தனியாய் நின்றாளே!
தண்ணிலவும் வாட்டுதடி--வான்
தாரகைகளும் கண்சிமிட்டி
கேலிகளும் செய்யுதடி!-எந்தன் மேலே
தென்பொதிகை தென்றலுமுமே
தீ” நெருப்பை அள்ளி வீசுதடி!--தனிமையிலே
மாலையும் வந்தாளே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment