”விளக்குகள் வேண்டாம்
கூரையில் ஒழுகும் நிலா”
”பயணத்தில் விரித்த புத்தகத்தை
மூடசொன்னது தூரத்து வானவில்”
”உன்னால் முடிகிறது குயிலே
ஊரறிய அழுவதற்கு
நான் மனிதப்பெண்”
”யார்வீட்டுக் குழந்தையோ!
அழுதது விழித்த எனக்குப்
பாதி நிலா”
” வீழ்ந்தமலர்
கிளைக்குத் திரும்புகின்றதா/
அடவண்ணத்துப் பூச்சி”
”மெல்ல நடங்கள்!
உதிர்ந்த பூக்களுக்குள்
எறும்புகள்!
அந்த சாலையில் போக்குவரத்தை நிறுத்துங்கள்
பாவம் எத்தனை நத்தைகள்”
”காலை நேர சிட்டுக்குருவிகள்!
செய்திவாசிப்பு!
மொழிபெயர்க்க ஆளில்லை!”
” நான் வீடுகட்டி குடிபுகுந்தேன்!
சிட்டுக்குருவி ஒன்று
கூடுகட்டி வாழ்ந்துகொண்டிருந்தது?’
”இரவெல்லாம் இனியகனவுகள்!
காலையில் காலைப் பிடித்தது”
கவலை முதலை”
’எனக்கு பிறப்பை அளித்த
இறைவனுக்கே!
கொடுக்க நான் நினைப்பது !
என் மரணம்”
நான் ரசித்த ஹைக்கூப் பூக்கள் தொடரும்
அன்புடன் கவிஞர் -தமிழ்பாலா-----
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment