காதலியே!என்றுமே
உனைப் பிரியாத வாழ்வே எந்தனுக்கு வேண்டுமே!ஒரு நொடியும்
உனைப் பிரியும் நிலை எனக்கென்றால் அந்நொடியே
எனதுயிரும் போகட்டுமே!உனைக் கண்டு காதல்கொண்ட
என்னிமையும் மூடட்டுமே!
உனைக் காணாத பொழுதெல்லாம் எந்தனுக்கு நரகமாகுமே!
உனைக் காணுகின்ற பொன்னாளெல்லாம் இம்மண்ணின் சுவர்க்கமாகுமே!
கனவில்கூட உனைப்பிரியும் நிலைவேண்டாம் எனதன்புக் காதலியே!
நனவெல்லாம் உன்கூட உண்மைக் காதலன்பு கொள்வேன் உன்காதலனே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment