கள்ளிக் காட்டிலும் நீ கால்மிதித்து போனபோது -கோடிக் கோடிக்
கனகாம்பர மலர்களும் மலர்ந்ததடி!என்வாழ்வின்
வசந்த காலமே!என்மனதினில் நீயும் போட்டுவிட்டாய் காதல் கோலமே!
எந்தன் தனிமைக்கு இனிமேல் விடுமுறைக் காலமே!
நமது இனிமைக்கு கொட்டட்டும் மங்கள மேளமே!
என் இரவுகளின் விடியலே
உன்னிரு ஓரப்பார்வையிலே தூங்குதடி!
என்னெதிர் வீட்டு சன்னலை மட்டுமல்ல
என்னிதயத்தின் கதவுகளையும் நீ திறந்தாயே!
உன்முதல் பார்வையிலேயே
என்னை நீயும் கைதுசெய்து
உன்னிதயத்திலேயே சிறைவைத்தாயே!.!
உனது கண்கள் ஏனடி மெளன மொழிமட்டும் பேசியது?
உன்னிதழின் புன்னகை முறுவல் மட்டும் ஏனடி மாயமானது?
கண்களில் மட்டும் சொல்லி இதழினில் வாராத காதலேனடி?எத்தனை நாட்கள் தான்
காதலை நெஞ்சினில் சுமந்து சொல்லாத காதலேனடி?
காதலின் உண்மை விளங்கவே காலங்கள் எத்தனை ஆகுமடி?- நானும்
காலமெல்லாம் எனது நெஞ்சம் ஊமையாக காத்திருக்கவோ?
காத்திருந்த காலமெல்லாம் கனவாகிப் போயிடுமோ>-இல்லை
சீ”சீ” இந்தப் பழம் புளிக்கும் என்ற நரிக்கதையாய் போய்விடுமோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment