Popular Posts

Sunday, April 3, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/-சிங்கள இனவெறியில் எங்கள் ஈழத்தமிழினம் உரிமையற்று வாழ்வாதாரமற்று !”

இந்தியா-இலங்கை பைனல்”! வாசகர்கள் சுடச்சுட கமெண்ட்”

இந்திய அணியின் பீல்டிங்க்,பவுலிங்க்
அருமையோ அருமை .வெற்றி நமதே!

இந்திய பவுலிங்க் எழுச்சியால் எழுந்தது’ கல கல’
இலங்கை விக்கெட் வீழ்ச்சியால் தகர்ந்தது’ லக லக ‘

இலங்கை வென்றது’ ஒன்லி டாஸ் டாஸ்’
உலகக்கோப்பைக்கோ லவ்லி இந்தியாவோ;பாஸ் பாஸ்’

ஆஸ்கார் வென்றதைப் போலவே தோனி உலகக்கோப்பைதனை வென்றாரே!

இந்தியாவின் பிடியில் சிக்கி சிங்களர்கள் சின்னாபின்னம் ஒன்லி விளையாட்டில்தான்
நிஜத்தில் ராஜபக்சே ஈழத்தமிழர்களை கொன்று குவித்தது இன்னும் ஆறவில்லை!

ஜாஹிரின் பவுலிங்க் டாப்பு டாப்புதான்
இலங்கைக்கு வச்சாச்சு ஆப்பு ஆப்புதான் விளையாட்டிலதான்
உண்மையில் எப்ப வக்கப்போறீங்க ஆப்பு ஆப்புதான்?

சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரவைத்தது
பாகிஸ்தானைப் பந்தாடியது
இறுதியாக சிங்களத்தை சிதறடித்தது விளையாட்டில்தான்
நிஜத்தில் இன்னும் ஈழத்தமிழர்கள் கண்ணீரிலேதான்!

கிலானியைப் போல் ராஜபக்சேயும் தோற்றது கிரிக்கெட் விளையாட்டில்தான்
இன்னும் அவனின் சிங்கள இனவெறி ஆணவம் வீழவில்லையே!

இந்தியாவிற்கு உலகக்கோப்பைக் கைதனில் வந்தாலும்
ஈழத்தமிழர்கள் கைதனிலே சுதந்திர உரிமை அதிகாரம் வரவில்லையே!

இந்தியரன் வேட்டையில் சிங்கள அணி அழிந்தது
ஆனால் சிங்கள இனவெறியில் எங்கள் ஈழத்தமிழினம் உரிமையற்று வாழ்வாதாரமற்று நாடிழந்து வீடிழந்து உடைமையிழந்து வீதியிலே!அழிந்துகொண்டு இருப்பது தொடர்கின்றதே!

உலகக் கோப்பை வெல்வதே இந்தியாவின் தவம்!அது நடந்தது
வாழ உரிமை கோர்வதே ஈழத்தமிழரின் தவம்!இது எப்போது நடப்பது?

2 comments:

திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்) said...

நண்பர்கள் அனைவருக்கும் தமிழாரனின் புதுவருட வாழ்த்துக்கள்

தமிழ்பாலா said...

யாழ் நிதர்சனன் அவர்களே! தங்கள் வருகைக்கு நன்றி எங்கு இனப்படுகோலை நடந்தாலும் எங்கு உழைக்கும் வர்க்கம் அழுத்தப்பட்டு ஏகாதிபத்தியத்தால் வர்க்கப் படுகொலையால் பாதிக்கப்பட்டு அடிமைப்பட்டுகிடந்தாலும் அதைக்கண்டு பொங்கி எழுகிற தோழமை உழைக்கும் வர்க்க உணர்வு என்பது இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் உள்ள பொதுவான உணர்வுதான் விளையாட்டு மட்டும் வாழ்க்கையல்ல விளையாட்டு என்பது வாழ்வின் ஒருபகுதிதான் ஆனால் வாழ்க்கைக்கும் வாழ்வதற்கும் போராடும் மக்களின் ஒப்பற்ற தோழனாய் மாறும் குணம் ஒவ்வொரு மனிதரிடத்தும் இருந்தாலே அதுவே ஒரு உன்னதமான உலகத்தை உருவாக்கிடுமே!இன உணர்வினை வர்க்க உணர்வாய் மாற்றாத போது அதிகாரத்து இனம் அடிமையான இனத்தை படுகொலை செய்வது என்பது ஒரு கொடூரமான நிகழ்வுகள்தான் ! அதை அறிந்து தெரிந்து நன்றாய் புரிந்து பொதுவுடைமைத் தத்துவத்தை அந்தந்த தேசத்து நடைமுறையில் செயல்படுத்தும் தலைமை இல்லாத போது என்றும் உண்மையான பொதுவுடைமைத் தேசங்களோடு கூடிய
பொதுவுடைமை உலகத்தை இந்த பூமிபந்தில் உருவாக்குவது என்பது கடினமான ஒன்றாகிடும்! எந்த அமைப்பாய் இருந்தாலும் அதிகாரம் என்பது ஒரு தனிமனிதனிடம் குவியும் போதினில் தன் சுயநலம் என்பது தலைவிரித்து ஆடி பொதுநலத்தினை சூறையாடும் திசையினில் பயணித்திடுமே! நல்ல கட்சி, நல்ல திட்டம், நல்ல கொள்கை , நல்ல இலக்கு,மக்கள் ,உழைக்கும் மக்கள் நலத்தை கருத்தில் கொண்ட கட்டமைப்பு அதாவது நல்ல கட்டமைப்பு, நல்ல செயல்முறை இல்லாத எந்தகட்சி எந்த தலைமை தலைமை தாங்கினாலும் இந்த உலகத்தில் எந்த மூலையில் எந்த கொந்தளிப்பு எந்த எழுச்சி நடந்தாலும் அதை ஏகாதிபத்தியம் தன் சொந்த நலனுக்காகவே பயன்படுத்துவது என்பது தவிர்த்திட இயலாததே!

அன்புடன் தமிழ்பாலா-------