Popular Posts

Saturday, April 2, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்/ஹைக்கூ/-காதலுக்குள் கலந்துவிட மொழியிருக்கா?-

உன்மனசுதான் கரையலையோ?
உன்னுளந்தான் உருகலையோ?
மன்மதனின் மலரம்புதான்பட்டு
உன்னெஞ்சுதான் மயங்கலையோ?

புல்லாங்குழலும் பிறந்ததடி
பூங்காற்று மேடையிலே!
யாழிசையும் இசைத்ததடி!
உன்னிதழின் சாடையிலே!

சிங்காரப் பேச்சின் சொல்லழகியே!
மஞ்சலுனா மஞ்சளடியோ!-இது கொச்சி
மலையாளத்து மஞ்சளடியோ
நாழி நறுக்கு மஞ்சளடியோ?
நன்னாழி பச்சை மஞ்சளடியோ?
நானினைக்கும் போதினிலே
என்னெனப்பில் வந்து நிற்கும்
இளவாழை குறுத்தடியோ?
எளவட்டம் கிறுகிறுக்கவே
என்னசொக்குப் பொடிதான் போட்டாயோ?

மாலை மலந்துருச்சு
மந்தாரம் தளுத்துருச்சு
சோலைக் குயிலெல்லாம்-செவிச்
சுவையாக கூவிருச்சு

ஏழைகருத்து புரிஞ்சுருச்சா?
எம்மனசு விளங்கிருச்சா?
ஆலைக் கரும்பாக உன்பார்வையாலே என்ன
அரைச்சு அரைச்சு குளிச்சவளே!
ஒம்மனசுல இடமிருக்கா?
உறவாட வழியிருக்கா?-காதலுக்குள்
கலந்துவிட மொழியிருக்கா?








No comments: