அடி சங்கீதத்தை பாடக் கற்றுக் கொள்ளும் முன்னே!
நீயும் தாய்மொழியை நன்றாய் பேசக் கற்றுக் கொள்ளடி!
அறைக்குள்ளே பாடித் தானே அம்பலத்தில் ஏறவேண்டுமடி!
ஒத்திகை இல்லாத எந்த செயலும் அரைகுறை தானடி!
சிறுகுழந்தைகூட அம்மாவை ம்மா ம்மா என்றே சொல்லி சொல்லியே
அன்புமொழியை கற்றுக் கொள்வதும் உனக்குத் தெரியாதா?
அனுபவம் ஒரு பள்ளிக்கூடம் தானடி
அதை அறிந்துகொண்டால் எதுவும் நம்சொந்தம் ஆகிடுமே!
அடி நடந்துபார்த்தால் நாடே நமதாகுமடி!
அடிபடுத்துக் கிடந்தால் பாயும் நமக்கு பகையாகுமடி!
சும்மா இருப்பவனுக்கு தானடி ஜாதகமும் மூட நம்பிக்கையும் !
உழைத்து உயர்வோருக்கு பகுத்தறிவு தானடி ஞானமருந்து!
அடி சங்கீதத்தை பாட கற்றுக் கொள்ளும் முன்னே!
நீயும் தாய்மொழியை நன்றாய் பேசக் கற்றுக் கொள்ளடி!
அறைக்குள்ளே பாடித் தானே அம்பலத்தில் ஏறவேண்டுமடி!
ஒத்திகை இல்லாத எந்த செயலும் அரைகுறை தானடி!
ம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment