உன் நிழலாக காத்திருந்தேன் ? என்னுயிர் தேவதையே!
உன் இமையாக போர்த்திருந்தேன் அன்புள்ள தோழியே!
உன் கொலுசாக ஒலித்திருந்தேன் தமிழ்த்தேன் மொழியே!
உன் கனவாக நினைத்திருந்தேன் அந்திமாலைத் தென்றலே!
உன் தோழனாக காத்திருந்தேன் ? கடலலையின் சீண்டலிலே!
உன் துணையாக ஆகிடவே பொருளாதாரம் தேவையடி!
அதற்காகவே கடல்கடந்தேன் நீ அக்கரையிலே நான் இக்கரையிலே!
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லையாமே!
அன்புள்ளங்கள் சேர்வதற்கே அதுவும் தொல்லையாமே!
சொந்த நாட்டிலே அடிமையான ஈழத்தமிழரைபோலவே!
காதலிருந்தும் கரைசேர முடியாமலே அன்புக் காதலியே
நீயும் அக்கரையிலே நானும் இக்கரையிலே காத்திருந்தோமே!
/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment