மலர்க்கூட்டம் அமர்ந்து இனிதே வண்டார்க்கும் காலமடி!
வரிக்குயில்கள் மாமரத்து இளந்தளிர் கோதிவிடும் காலமடி!-காதல்
இளையவர்க்கு எல்லாம் இளந்தென்றல் அமுதளிக்கும் காலமடி!
இளநிலவே புதுக்கனவில் எழுந்து மலர்ந்திருக்கும் காலமடி!
புதுக்கவிதை எழுதுகின்ற இளங்கவிஞன் அமர்ந்திருக்கும் காலமடி!
போராளி தன்மக்களுக்கு போராட நாள்பார்க்கும் காலமடி!
புரட்சிக்கே வித்திடவே நல்லோர்கள் அணிவகுக்கும் காலமடி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment