உன்மனதினிலும்
என்மனதினிலும்!-என்றும்
கடலலையாய் ஓயாதிருக்கும்! பேரின்பக் காதலே!ஈர மணலாய்
காலமெல்லாம் காயாதிருக்கும் உனதன்புப் பார்வையே!
உடலில்லை உளமிருக்கும் மெய்ஞானக் காதலே!இந்த
உலகமுள்ள வரையிருக்கும் விஞ்ஞானக் காதலே!
பார்த்தவுடன் பரவசமிருக்கும் பக்குவக் காதலே-கண்ணில்
படித்தவுடன் சுகமிருக்கும் இலக்கியக் காதலே!!
நினைத்தவுடன் இதமிருக்கும் கவிதைக் காதலே!
அணைத்தவுடன் மயக்கமிருக்கும் பருவக் காதலே!
உடலுக்குள் அதிமோகமிருக்கும் வன்முறைக் காதலே!
இளவயதில் அறியாதிருக்கும் சிறுமைக் காதலே!
முதுமையிலும் தொடர்ந்துவரும் உண்மைக் காதலே!
மனைவிவிட்டு வேறுதொடரும் கள்ளக் காதலே!
மாற்றான் மனைவி நினைக்கும் அழிவுக் காதலே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment