Popular Posts

Tuesday, May 31, 2011

தமிழ்பாலா/காதல்/கவிதை/சொற்சித்திரங்கள்/தத்துவம்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/-”,தோழர்,ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது,எமது படைப்புலக வாழ்த்துக்கள்!

மனித நேய,மக்கள் இலக்கிய அடலேறு,தோழர்,ராமகிருஷ்ணன் அவர்களுக்கு
எனது,எமது படைப்புலக வாழ்த்துக்கள்!

பதவிகளும்,பரிசுகளும்,பாராட்டுகளும் அனைத்தும் விருதுகளும் எல்லாம் -உம்
படைப்புலகை மென்மேலும் மெருகூட்டும் விழியாகட்டும்!~

Monday, May 30, 2011

தமிழ்பாலா-/காதல்/க்விதை/தத்துவம்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/சொற்சித்திரங்கள்/-”காதல் நினைவை தவிர ”

காதலியே .....
என் நினைவாக உன்னிடம் காதலன்பு ஒன்று உள்ளதடி!
ஆனாலும்
என்னிடம் உன்என் காதல் நினைவை தவிர வேறு ஒன்றும் இல்லையடி....

யார் என்னை விட்டு சென்றபோதும் ஒருபோதும் நானென்றும்
இம்மண்ணில் அழுததில்லையே!.......

ஆனாலும்

நீ என்னை விட்டு பிரிந்தபோது எந்தனுக்கே! நானென்றும்
அழாத நொடிப்பொழுதும் இவ்வுலகினில் இல்லையடி!

Sunday, May 29, 2011

!தமிழ்பாலா/-காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூ/ஐக்கூ/-மீண்டும் மீண்டும் காதல் பூபூக்கும்”

மீண்டும் மீண்டும்
காதல் பூபூக்கும்

உன்னொரு
புன்னகையால் மட்டுமே
மீண்டும் மீண்டும் காதல் பூபூக்கும்


உன் நினைவுகளைத்
சொல்லும் இரவுகளே!-எனக்கே நான்
செல்லும் இடம்தெரியாது பயணம்செய்யும் மாயமென்ன? மந்திரமென்ன?
அல்லும் பகலும் உன் நினைவில் நானும் தவிப்பதென்ன? தவிப்புமென்ன?

உன்
கொஞ்சும் மனதினிலே
மஞ்சம் கேட்டு கெஞ்சும் கோலமென்ன?


பசியில்லாத வாழ் நாளும்
பட்டினி இரவுகளும் எந்தனுக்கே
பழகிப் போனதடி

உனக்குள் கலந்துவிட்ட
வாழ்க்கைச் நீரூற்றினில் -அன்பு கொண்டு
என் வேர்கள் நீர்தேடுதடி

மீண்டும் மீண்டும்
காதல் பூபூக்கும்

உன்னொரு
புன்னகையால் மட்டுமே
மீண்டும் மீண்டும் காதல் பூபூக்கும்

தமிழ்பாலா/-காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூ/ஐக்கூ/-”கொட்டும் மழையில் எட்டிப் பார்க்கும் மஞ்சள் வெயிலே!

காதல் நிலவே கன்னி மலரே-தென்றல்
காற்றின் குளிரே சந்தன் மணமே!
கொட்டும் மழையில் எட்டிப் பார்க்கும்
மஞ்சள் வெயிலே!
….ஓடும் நீரில் முகம் பார்க்கும்
சிட்டுக் குருவியின் பரவசமே!…
என்னை நீயும்
உருகும் மெழுகில் உதிரும் விட்டில்போல்-காதல்
மனதினில் உருக்கிடும் மாயம் தான் என்ன?
கால் நனைத்த காலைப் பனியின்
ஈரம் கண்ணில்…தந்ததும் ஏனடி?
தரையில் விழுந்த மீனின்
துடிப்பு இதயத்தில்…தந்ததும் ஏனடி?-என் நினைவு தன்னையே! நீயும்.வெடித்துப் பறக்கும் பருத்தியைப் போல்வே!…
ஒரு நொடியில் வானவீதியில் சிறகின்றி பறக்க விட்டு
ஊனுமின்றி உறக்கமின்றி தவிக்கவிட்டதும் ஏனடியோ?
கொட்டும் மழையில் எட்டிப் பார்க்கும்
மஞ்சள் வெயிலே!
….ஓடும் நீரில் முகம் பார்க்கும்
சிட்டுக் குருவியின் பரவசமே!
உருகும் மெழுகில் உதிரும் விட்டில்போல்-காதல்
மனதினில் உருக்கிடும் மாயம் தான் என்ன?


/-”

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/அரசியல்/அனுபவம்/-ஹைக்கூ/ஐக்கூ/ இளமைச் சாரல் துளியே!

.
காதலர் நம்கை
விரல்களின் ஸ்பரிசத்தில்
பொழிந்தது காதல்மழையே!-குடை
காற்றினில் ஆடிடும் இடைவெளியினிலே!-அன்பினில்
கனிந்திடும் இளமைச் சாரல் துளியே!

நானும் நீயுமே
ஒரு குடையின் கீழே
கைவிரல்கள் கோர்த்தே
மெளனித்து நாமும் நடந்திடும்போதினிலே-காதலர் நம்கை
விரல்களின் ஸ்பரிசத்தில்
பொழிந்தது காதல்மழையே!

சிப்பிக்குள் ஒளிந்திருக்கும்
முத்தாகவே!காதலியே உந்தன்
கன்னக்குழிக்குள்
ஒளிந்திருக்கிறதே காதல் புன்னகையே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/அரசியல்/அனுபவம்/-ஹைக்கூ/ஐக்கூ/காதலிலே பூத்தபூவும் நீயல்லவா?-

ஏனடி ? ஏனடி? காற்றினிலே தேன்குடித்து தேனீக்கள் பற்ந்ததேன்னவோ?
பூவையே நீவந்து பேசுகையிலே!-அந்த
பூக்களுக்குத்தான் என்ன வருத்தமடியோ?-உனது
பார்வை மலரும் போதெல்லாமே!-எனது விழிகளே வண்ணத்துப்
பூச்சிகளாய் இமைச்சிறகடித்து பறந்திடுவதுதான் என்னவோ?!
மழையினில் நனைந்தாய் மேகத்தில் துவட்டினாய்!
வாசமுமுண்டு வாடுவதுமில்லை
காதலிலே பூத்தபூவும் நீயல்லவா?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/அரசியல்/அனுபவம்/-ஹைக்கூ/ஐக்கூ/-காலமெல்லாம் வாழ்கின்ற அன்புக் கவிதையாகவே!

நானும் எழுதிய
காதல் கடிதமிது- நானே வாழும்

காலத்திலேயே எழுதிடவேண்டும் என்று எண்ணிய
காலத்தின் வசந்தமிது~ காதல் கடிதமிது!
காதலியே உனக்கு
நானும் எழுதிய
காதல் கடிதமிது-
காதலியே நானுன்னை சந்தித்த நாள்முதலாகவே!
கண்களாலே எழுதிப் பழகிய பார்வையின் முகவரியிது!

காற்றினிலே கடுமழையினிலும் நடப்பதற்கே சிறகாலே நான் தடுமாறிய போது!-அன்பு
வானத்திலே பறந்திடவே எந்தனுக்கு கற்றுத்தந்தவள் நீயல்லவா?
வாழுகின்ற மனிதரெல்லாம் சதையாலே சேர்க்கப்பட்டவர் என்று நான்சொன்ன போதிலும்!
வாழும் மனிதரெல்லாம் மனித நேயத்தால் கட்டப்பட்டவர் என்று சொன்னவளே!

ஆகாய விண்மீன்கள் எல்லாம் இரவுபகல் அடையாளம் என்றுசொன்ன எந்தனுக்கே!-அந்த
அண்டத்தையே தொட்டுவிட என்னோடு சேர்ந்துவந்த பீனிக்ஸ் பறவை நீயல்லவா?-வாழ்வின்
கணக்கினை மட்டும் கணக்குப் பார்த்து வாழஎண்ணிய சராசரி மனிதன் நானல்லவா?
காலமெல்லாம் வாழ்கின்ற அன்புக் கவிதையாகவே என்னோடு வாழ்கின்றவள் நீயல்லவா?

நானும் எழுதிய
காதல் கடிதமிது- நானே வாழும்

காலத்திலேயே எழுதிடவேண்டும் என்று எண்ணிய
காலத்தின் வசந்தமிது~ காதல் கடிதமிது!
காதலியே உனக்கு
நானும் எழுதிய
காதல் கடிதமிது-







.

Saturday, May 28, 2011

தமிழ்பாலா/-காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/ஐக்கூ/சொற்சித்திரங்கள்/அரசியல்/அனுபவம்/-”காதலே புரிந்தே சொல்ல முடியாத கவிதையானதே!

காதலே
ஒரு வரியில்
சொல்ல முடியாத புதிரானதே!

காதலே
புரிந்தே சொல்ல முடியாத
கவிதையானதே!

காதலே
ஒரு மெய்யிற்குள்
இரண்டு உயிர்கொண்டதே!

காதலே
ஒரே உறவுக்குள்
உலகத்தை உணர்ந்து கொண்டதே!.

காதலே
மண்ணுக்கே கிடைத்த
நித்திய வரமானதே!

காதலே
மலர்ந்த
பூக்கள் தருகின்ற மணமானதே!


காதலே!
வேறு ஒருவராலும் உணரவும்
உணர்த்தவும் முடியாத உறவானதே!

காதலே!
என்றும் எவரும்
கேட்கின்ற
கேள்விகளுக்கெல்லாமே!
காத்திருக்கும் பதிலானதே!

காதலே!
இரண்டு மனங்களின் சந்திப்பில்
இன்ப உலகத்திற்கான தேடலானது!

காதலே
எவ்வளவு உணர்ந்தாலும்
இன்னமும் சொல்லவும் கேட்கவும்
விரும்புகிற உணர்வானது!

தமிழ்பாலா/-காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/ஐக்கூ/சொற்சித்திரங்கள்/அரசியல்/அனுபவம்/-”காதல்மழை!

நீமழை ஆனாய் நான் துளியானேன்!
அடிமெல்லப் பொழிந்தது காதல்மழை!
நீ நிலவானாய் நான் குளிரானேன் !
அடிஅள்ளித் சென்றது அன்புவெள்ளம்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/அரசியல்/அனுபவம்/சொற்சித்திரங்கள்/-”காதலன்பு உள்ளதடி !

நான் நானாக இருப்பதற்கு காரணமே நீதானடி!
நீ நீயாக இருப்பதற்கு காரணமே நான் தானடி!
நீயெனக்குள்ளும் நானுனக்குள்ளும் இருக்கும் போதினிலே!
நீ நீயாக இருப்பதிலும் நான் நானாக இருப்பதிலும் காதலன்பு உள்ளதடி !

Friday, May 27, 2011

தமிழ்பாலா/காதல்/கவிதை/சொற்சித்திரங்கள்/தத்துவம்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/-”காதலுக்குள் சங்கமித்தாளே!”

காலமெல்லாம் வாழுகின்ற
காதலுக்குள் சங்கமித்தாளே!
கோலமிட்டு காலாலே!
காதல்கதை சொன்னாளே!
புன்னைமரத்து நிழலிலே!
மாதவியும் மல்லிகையும் !
பூத்து மணக்கும் சோலையிலே!
காதல் தலைவனே கன்னித் தலைவியின் தோழனே!
கண்ணாலே சந்தித்து நெஞ்சாலே அணச்சிட்டு காதல் தலைவியே!
காலமெல்லாம் வாழுகின்ற
காதலுக்குள் சங்கமித்தாளே!
கோலமிட்டு காலாலே!
காதல்கதை சொன்னாளே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/ஐக்கூ/சொற்சித்திரங்கள்/-தலைவன் அவனே என்னதவம் செய்தானோ?

கோவில் கோபுரத்தில் பதித்த அழகுசிலையோ?-அவள்
குழைந்து நடந்தால் அன்னமும் தோற்றிடுமே!-அவள்
கொஞ்சி பேசினால் கிளியும் திகைத்திடுமே!-அவள்
தேனாய் பாடினால் குயிலும் ஓடிடுமே!-அவளின்
மேனியின் குளுமை கண்டு நீரோடையும் நாணிடுமே!-அந்த

தலைவியவள் தலைவனையே காதலித்தாளே!
தலைவனவனே தலைவியவளே! விரும்பிடவே!-தலைவன்
அவனே என்னதவம் செய்தானோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்/ஹைக்கூ/ஐக்கூ/-”கவிதையாய் காதல் நிற்கும் நிற்கும்!

காலம் போய்விடும் போய்விடும்!-கவிதையாய்
காதல் நிற்கும் நிற்கும்!
வாழ்க்கை போய்விடும் போய்விடும்!- உண்மை
வார்த்தை நிற்கும் நிற்கும்!
கோலம் அழிந்துவிடும் அழிந்துவிடும்- நல்ல
கொள்கை நிற்கும் நிற்கும்!
மண்ணும் மாறிவிடும் மாறிவிடும்!- அன்பான
மனிதம் என்றும் நிற்கும்!
விண்ணும்கூட போய்விடும் - நம்
விழிபிறந்த நேசம் நிற்கும்!
கடலும் தூர்ந்துவிடும் தூர்ந்துவிடும்- நம்
காதல் நிற்கும் நிற்கும்!

Sunday, May 22, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-” நண்பர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு,தோழமையுடன் கவிஞர்,தமிழ்பாலா”--’

அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.

’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’

எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.

-----நாஞ்சில்நாடன்------- அவர்களுக்கு ,

அங்கீகாரமற்ற கோடிப் படைப்பாளிகள் மண்ணில்!
அங்கீகாரம்பெற்ற சில படைப்பாளிகள் விண்ணில்!
அங்கீகாரம்பெற்ற சிலரிலும் நல்ல படைப்புக்கள் கொஞ்சம்!
அங்கீகாரம்பெற்ற சிலரின் நல்லபடைப்புக்களுக்கோ வந்ததிங்கே பஞ்சம்!
அங்கீகாரத்திற்கு தினம்போராடும் நல்லபடைப்பாளர்களும் உண்டு!
அங்கீகாரத்தை தக்கவைக்கப் போராடும் படைப்பாளர்களும் உண்டு!
அரங்கத்திலிருந்து அம்பலத்தில் ஏறாத எதுவும் பயனாவது இல்லை!தாங்கள் கூறியுள்ள
பேரும்புகழும் தேடும் மார்க்கம் அல்ல என்பதில் ’எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே’ என்று உங்களுடைய சுயவிவரத்தில் கூறியுள்ளதில் அங்கீகாரம் என்பதுதான் என்ன?.அது புகழினை குறிப்பிடவில்லையா? உங்களின் பேரினைக் குறிப்பிடவில்லையா?

தோழமையுடன்,
தமிழ்பாலா-------

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-”சத்ய சாய்பாபாவே”--’

அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.

’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’

எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.

-----நாஞ்சில்நாடன்

அங்கீகாரமற்ற கோடிப் படைப்பாளிகள் மண்ணில்!
அங்கீகாரம்பெற்ற சில படைப்பாளிகள் விண்ணில்!
அங்கீகாரம்பெற்ற சிலரிலும் நல்ல படைப்புக்கள் கொஞ்சம்!
அங்கீகாரம்பெற்ற சிலரின் நல்லபடைப்புக்களுக்கோ வந்ததிங்கே பஞ்சம்!
அங்கீகாரத்திற்கு தினம்போராடும் நல்லபடைப்பாளர்களும் உண்டு!
அங்கீகாரத்தை தக்கவைக்கப் போராடும் படைப்பாளர்களும் உண்டு!
அரங்கத்திலிருந்து அம்பலத்தில் ஏறாத எதுவும் பயனாவது இல்லை!தாங்கள் கூறியுள்ள
பேரும்புகழும் தேடும் மார்க்கம் அல்ல என்பதில் ’எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே’ என்று உங்களுடைய சுயவிவரத்தில் கூறியுள்ளதில் அங்கீகாரம் என்பதுதான் என்ன?.அது புகழினை குறிப்பிடவில்லையா? உங்களின் பேரினைக் குறிப்பிடவில்லையா?

Wednesday, May 18, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-”இசைஞானியவரின் இளவல் யுவன்சங்கர் ராஜா அவரின் கவனத்திற்கு””--’

ஓவியக் கலஞன் ஒருவனே! மென்மைத்
தூரிகை கொண்டே வண்ணமே குழைத்து
தீட்டிய அழகு ஓவியமே!~அவளே!
எழிலாம் காவியமே!

கட்டுடல் கன்னியருகே!அவளின் அந்த பொன்னிற மேனியாளின் கண்களே!
கயல்மீனாய் நீண்டு காதளவு செல்கின்றதே!அவளின்
கரியகூந்தல் மேகத் திரளானதே!-அவளின்
செக்கச் சிவந்த இதழ்கள் செம்பவளமானதே!-அவளோ
முல்லை மொட்டுப் பற்களிலே!
மோகனப் புன்னகை செய்தாளே!-அவளின்
தங்கக்குட நெஞ்சழகு மேலும்
கண்ணாடியாய் பளபளக்கும் கன்னங்களே!அவளோ
நூல்போல் சிறுத்த சிற்றிடையாள்
செவ்வாழையாய் வழவழத்த கால்கொண்டு நடந்துவந்தாளே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-”யுவன்சங்கர் ராஜா வீட்டில் அவர்பிரிந்த செல்ல நாய்வெண்ணிலா பற்றிய ஒரு கற்பனைபாடல்””--’

செல்ல வெண்ணிலாவே நீயும் போன இடம்தான் எங்கே?
சிரிக்கும் கண்மலரே நீயும் உன்வாசம் மறந்ததுதான் என்ன?
அற்றிணைதான் என்றபோதும் உன் நன்றிதான் பெரிதே!
உன்வாலினை ஆட்டுவதில் உன்குரல்தான் இருந்ததே!

எங்கள் குடும்ப மனிதரில் ஒன்றாய் வளர்ந்தாய் நீயே!
அன்பில் மனிதர்க்கு சளைத்ததுதான் நீயில்லையே!
உன்னன்பு நேசம் பாசம் எல்லாம் போயினவே!
இருந்தாலும் நீயெங்கள் நெஞ்சத்தில் வாழ்கின்றாயே!

ஆறறிவு மனிதர்க்கும் இல்லாத அன்புவெள்ளம் பொழிந்தாயே!
நீயில்லை என்றாலும் உன் நினைவு தானே எங்களுக்கு எல்லை!
காணாத காட்சியெல்லாம் நீசெய்த குறும்புதான் எங்கே?
கண்கண்ட ஐந்தறிவு ஜூவனே உனைமறக்க முடியவில்லையே!

செல்ல வெண்ணிலாவே நீயும் போன இடம்தான் எங்கே?
சிரிக்கும் கண்மலரே நீயும் உன்வாசம் மறந்ததுதான் என்ன?
அற்றிணைதான் என்றபோதும் உன் நன்றிதான் பெரிதே!
உன்வாலினை ஆட்டுவதில் உன்குரல்தான் இருந்ததே!

Monday, May 16, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-”'மாமா' 'மச்சான்' மாறுவதில்லை! ”--’

தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போவதில்லை! பூமலர்களே!
பேசக் கூட மறந்தாலும்
வாசம் மாறி போவதில்லை! நட்பு வானத்திலே!
வருஷம் பல கழிஞ்சாலும்
வரவேற்பு குறையாது! எவருக்கும்
வசதி வாய்ப்பு வந்தாலும் -அந்த நாளின் உறவான
'மாமா' 'மச்சான்' மாறுவதில்லை!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-ஐயா நெல்லைக் கண்ணன் அவர்களுக்கும் , சகோதரர் தமிழருவிமணியன் அவர்களுக்கும்,”””--’

ஐயா நெல்லைக் கண்ணன் அவர்களுக்கும் , சகோதரர் தமிழருவிமணியன் அவர்களுக்கும்,
அரசியல் மாற்றத்தின் நடுநிலை படைப்பாளிகளாம் தங்களுக்கு எனது ,தமிழக மக்களின் சார்பாக
நன்றி ! நன்றி! நன்றி!

உங்களின் எழுத்துப் பணி இத்துடன் ஓய்ந்துவிடவில்லை இனியும் தொடரட்டும் !
உங்களின் நெஞ்சுறுதி மக்களை விட்டு விலகிவிடும் ஒவ்வொரு அரசியல் இயக்கத்திற்கும் என்றும் சாட்டையடியாக நிமிரட்டும் ! உங்களின் கூட்டினில் இளம் படைப்பாளிகளை இணைத்து ஒரு புதிய இலக்கிய இலக்கை எட்டிட உங்களின் இலக்கிய பயணம் வீறு நடைபோடட்டும்!

மக்களைவிட்டு விலகிய எந்த அரசியலும் -எந்த தத்துவமும் சுனாமியாய் சுருட்டப்பட்டு
மாற்றத்தில் குப்பைக்குப் போய்விடும்!

தோழமையுடன்,
கவிஞர்-தமிழ்பாலா-----------

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-மாற்றம்தந்த மக்களுக்கு சேவைசெய்வது நன்றாகுமே!’””--’

மக்களுக்கு நல்லதுசெய்வது நன்றாகுமே!மாற்றம்தந்த
மக்களுக்கு சேவைசெய்வது நன்றாகுமே!-விலையேற்றத்தை
மக்களுக்கு இறக்கிடுவது நன்றாகுமே!மின்வெட்டை
மக்களுக்கு தீர்த்திடுவதும் நன்றாகுமே!


நல்லாரைக் காண்பதுவும் நன்றாகுமே! நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றாகுமே! - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றாகுமே!; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்றாகுமே!

மக்களுக்கு நல்லதுசெய்வது நன்றாகுமே!மாற்றம்தந்த
மக்களுக்கு சேவைசெய்வது நன்றாகுமே!-விலையேற்றத்தை
மக்களுக்கு இறக்கிடுவது நன்றாகுமே!மின்வெட்டை
மக்களுக்கு தீர்த்திடுவதும் நன்றாகுமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-மக்களைவிட்டு விலகிய எந்த அரசியலும்!””--’

மக்களைவிட்டு விலகிய எந்த அரசியலும் -எந்த தத்துவமும் சுனாமியாய் சுருட்டப்பட்டு
மாற்றத்தில் குப்பைக்குப் போய்விடும்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/- உனது பழைய அந்த அதிகார ஆணவத்தை விடமாட்டேன் என்றால் -ஒரு நாள்உனக்கும் மக்களின் நியாயத் தீர்ப்பு எழுதப்படும்!”””--’

உனது பழைய !
அந்த அதிகார ஆணவத்தை விடமாட்டேன் என்றால்!-ஒரு நாள்
உனக்கும் மக்களின் நியாயத் தீர்ப்பு எழுதப்படும்!
தேர்தல் வந்தது தேர்தல் கமிஷனால்-அதன் நேர்மையால்
தெருவெல்லாம் நிசப்தம் சந்தோசம்!
எனக்குப் பிடித்த வேட்பாளர்களுக்கு
வாக்கினை செலுத்தி ஜன நாயகக் கடமையை!
நானும் நிறைவேற்ற ஓடோடிச் சென்று
அறம்செய்ய விரும்பினேன் ஆனாலும்
அடாவடி அரசியல் போலிவாக்குறுதி வேட்பாளர்
அவர்களோ!
அந்த காகித உறைகளில் காசினை வைத்து
எந்தன் வாக்கு உரிமையை கேட்டார்கள்
எனக்கு காசு வேண்டாம் என்றேன்!
ஆனாலும் எனது வீட்டுவாசலில் நாளேட்டின்
உள்ளே காசினைவைத்து கொடுத்தார்கள்!

இருந்தாலும் எனது நெஞ்சுறுதியாலே
எனக்குப் பிடித்த வேட்பாளருக்கு
எனது வாக்குரிமையை செலுத்தினேன்!
எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும்
மாற்றத்தை விரும்பிய வண்ணமே!
தேர்தலின் முடிவுவந்தது தெருவெல்லாம்
தேடிப் பார்த்தேன் அடாவடி அரசியல்
ஓடி ஒளிந்துகொண்டது!புரிந்துகொண்டேன்!!

அரியணை ஏறிய மாற்று அரசாங்கமே!
உனக்கும் ஒரு எச்சரிக்கை செய்கின்றேன்
உனது பழைய அதிகார ஆணவத்தை
ஒடுக்கி சுருக்கி வைக்காவிட்டால் இந்த
அடாவடி அரசியலுக்கு ஏற்பட்ட அதோ கதிதான் -உனக்கும்
அதனாலே மக்களுக்காக பணியாற்று!-இல்லை உனது பழைய
அந்த அதிகார ஆணவத்தை விடமாட்டேன் என்றால்-ஒரு நாள்
உனக்கும் மக்களின் நியாயத் தீர்ப்பு எழுதப்படும்!

மக்களைவிட்டு விலகிய எந்த அரசியலும் -எந்த தத்துவமும் சுனாமியாய் சுருட்டப்பட்டு
மாற்றத்தில் குப்பைக்குப் போய்விடும்!

Sunday, May 15, 2011

தமிழ்பாலா-/காதலகவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/கட்டுரை/. நான் ரசித்த ஹைக்கூப்பூக்கள்/’

”விளக்குகள் வேண்டாம்
கூரையில் ஒழுகும் நிலா”


”பயணத்தில் விரித்த புத்தகத்தை
மூடசொன்னது தூரத்து வானவில்”


”உன்னால் முடிகிறது குயிலே
ஊரறிய அழுவதற்கு
நான் மனிதப்பெண்”


”யார்வீட்டுக் குழந்தையோ!
அழுதது விழித்த எனக்குப்
பாதி நிலா”

” வீழ்ந்தமலர்
கிளைக்குத் திரும்புகின்றதா/
அடவண்ணத்துப் பூச்சி”


”மெல்ல நடங்கள்!
உதிர்ந்த பூக்களுக்குள்
எறும்புகள்!
அந்த சாலையில் போக்குவரத்தை நிறுத்துங்கள்
பாவம் எத்தனை நத்தைகள்”

”காலை நேர சிட்டுக்குருவிகள்!
செய்திவாசிப்பு!
மொழிபெயர்க்க ஆளில்லை!”

” நான் வீடுகட்டி குடிபுகுந்தேன்!
சிட்டுக்குருவி ஒன்று
கூடுகட்டி வாழ்ந்துகொண்டிருந்தது?’

”இரவெல்லாம் இனியகனவுகள்!
காலையில் காலைப் பிடித்தது”
கவலை முதலை”


’எனக்கு பிறப்பை அளித்த
இறைவனுக்கே!
கொடுக்க நான் நினைப்பது !
என் மரணம்”

நான் ரசித்த ஹைக்கூப் பூக்கள் தொடரும்
அன்புடன் கவிஞர் -தமிழ்பாலா-----

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-”கட்டுரை/ நான் ரசித்த விஷயங்கள்/ ஹைக்கூப் பூக்கள் “தயவுசெய்து யாரும் முதலைக் கண்ணீர் வடித்திடவேண்டாம்!/

நான் இறந்தால் எனது சவச்சடங்குகள் எந்த சமய சார்பாக வேண்டுமானாலும் நடக்கட்டும்!
ஆனால் ! என்வாழ்க்கைப் பற்றிய பேச்சுக்களும் ,வாசிப்புகளும் தேவையற்றவை!என் இறப்பிற்குப் பின் புத்தசார்பான எந்த பெயர்களும் எனக்கு சூட்டப்படவேண்டாம்!
தயவுசெய்து யாரும் முதலைக் கண்ணீர் வடித்திடவேண்டாம்!இயல்பாக சிரித்துப் பேசி இருந்துவிடுங்கள்!
-----------ஷிகி
என்ற பகுத்தறிவான கவிஞரின் இந்தவாசகங்கள் என்னை மிகவும் ஈர்த்தன.

------அன்புடன் கவிஞர் தமிழ்பாலா------

தமிழ்பாலா/ கட்டுரை/ஹைக்கூ /கவிதை/ஆய்வு/நான் ரசித்த ஹைக்கூ பூக்கள்!

”ஏழையின் சிரிப்பினில்
இறைவன் வந்தான் கோவணத்தோடு”

ஆம் இறைவன் அவனும் தன்வறுமைக்காக இல்லாமைக்காக மனிதனோடு
சேர்ந்து போராட வந்தானோ?


”எந்த ரப்பரைக் கொண்டும் அழிக்கமுடியவில்லை
வறுமைக்கோடு”

ஆனால்
மக்கள் ஜன நாயக புரட்சியாலே அதை அழித்திடலாமே!


”மதுக்கடையை திறந்துவைத்தார் அமைச்சர்
காந்திசிலை அருகில்”
எம்.பாலகுமார் -திருச்சி-
”அமைச்சரின் அன்னக்கை அதன் அருகினில் பாரை திறந்தார்”

”கலவரம்
சிலைகள் உடைந்தன
கழிப்பிடம் இழந்தன காக்கைகள்”
வடுவூர்-சிவமுரளி----

”அதுமட்டுமா? மீண்டும் ஒரு சாதிக் கலவரத்தை உருவாக்கின”

நான் ரசித்த ஹைக்கூப் பூக்கள் இன்னும் தொடரும்!

தோழமையுடன் கவிஞர் தமிழ்பாலா-------

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-”முட்டாள் தொண்டனே!

ஏதாவது ஒரு பிரச்னைக்காக எந்த போலி அரசியல் தலைவனாவது என்றாவது எந்த நாட்டிலாவது
தீப்பெட்டியையும் மண்ணெணை டின்னையும் கையினில் எடுத்து
தீக்குளிக்கப் போகின்றேன் என்று என்றாவது சவால் விட்டிருக்கின்றானா?
என்று நீயும் ஆய்ந்து பகுத்தறியாமலே! மூடனே!
முட்டாள் தொண்டனே ஏனடா நீ ?
தீக்குளிக்கின்றேன் என்று கொக்கரிக்கின்றாய்?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/கட்டுரைசீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!-”

சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தமிழினத்தை மட்டும் கருத்தில் கொண்டு தமிழகத்தில் ஒருவேள்வி நடத்திய தோழர் சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்”
காங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி ”
என்று உரக்கச்சொல்லும் ஒப்பற்ற தமிழனே !சீமானே
உந்தனுக்கு எந்தன் உளப்பூர்வமான வாழ்த்துக்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில்
பணபலத்திற்கு அஞ்சாத
அதிகாரபலத்திற்கு அஞ்சாத
உண்மையான வாக்கு அஸ்திரத்தால்
திமுக காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்திய
தமிழ் உணர்வுகொண்ட நல்ல தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி நன்றி

எந்த தேசமே என்றாலும் மக்களைவிட்டு விலகிய எந்த அரசியல் கட்சிக்கும்
இதே நிலைதான் என்பதை தமிழகம் நிரூபித்துவிட்டது!

ஊழலை எதிர்த்து,வன்முறையை எதிர்த்து,குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து
மணற்கொள்ளையை எதிர்த்து,திரைத்துறையினில் ஏகபோகத்தை எதிர்த்து, நிர்வாக சீர்கேட்டை எதிர்த்து,தமிழின துரோகத்தை எதிர்த்து கிளம்பிய சுனாமியே தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவே!ஆதிக்கத்தை அதிகாரத்தை விரட்டியடித்து ,விலைவாசி உயர்வுக்கு எதிராக,மின்வெட்டை எதிர்த்த போரின் இறுதிமுடிவே!



தன் சுயலாபத்திற்காக தமிழினத்தையே காவுகொடுத்தவர்கள் காசுக்கு வாக்கினை விலைபேசியவர்கள் இப்போது எங்கே மூலையிலே முடங்கிக் கிடக்கின்றார்கள்!
ஈழத்தில் நமது தமிழின உறவுகளை சிங்கள இனவெறியர்கள் கொன்று குவிக்க பேருதவி புரிந்த காங்கிரசை இந்தத் தேர்தலில் முழுவதுமாக வீழ்த்திவிட்டார்கள்!
. புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் திறம்பட செயல்பட வாழ்த்துகிறேன்.என்ற சீமானின் வாழ்த்துக்கள் நடந்தேறட்டும்
சீமானின் மிகப்பெரிய பிரச்சாரத்தால் காங்கிரஸ் வீழ்ந்தது!
ஈழமண்ணின் சிங்கள வெறியனால் மாண்டஒவ்வொரு தமிழனின் குருதி அணுக்களும் சந்தோசப்படட்டும்!

Sunday, May 8, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூகனவில்கூட உனைப்பிரியும் நிலைவேண்டாம் எனதன்புக் காதலியே!/”--’

காதலியே!என்றுமே
உனைப் பிரியாத வாழ்வே எந்தனுக்கு வேண்டுமே!ஒரு நொடியும்
உனைப் பிரியும் நிலை எனக்கென்றால் அந்நொடியே
எனதுயிரும் போகட்டுமே!உனைக் கண்டு காதல்கொண்ட
என்னிமையும் மூடட்டுமே!
உனைக் காணாத பொழுதெல்லாம் எந்தனுக்கு நரகமாகுமே!
உனைக் காணுகின்ற பொன்னாளெல்லாம் இம்மண்ணின் சுவர்க்கமாகுமே!
கனவில்கூட உனைப்பிரியும் நிலைவேண்டாம் எனதன்புக் காதலியே!
நனவெல்லாம் உன்கூட உண்மைக் காதலன்பு கொள்வேன் உன்காதலனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்-”-கோடிப் பிறவி இருந்து எடுத்தாலும் காதலன் அவனே அன்புக் கணவன்”

விடியும் வரையினில் காமன் விளையாட்டு--பொழுது
புலரும் வரையினில் காதல் பண்பாட்டு--அந்த
மன்மத பாடத்துக்கு -காதலரே!
கருத்தாழம் கண்டனரே!
காதலன் அவனோ
காதலி அவளை!
கணப்பொழுதும் பிரியேன் என்றானே!
காதலி அவளோ
கோடிப் பிறவி எடுத்தாலும்
காதலன் அவனே அன்புக் கணவன் அறிவுத் துணைவன் என்றாளே!


கண்களாலே நோக்கி நோக்கி
மகிழ்ந்த விழிகளில்- நெஞ்சில்
முகிழ்ந்த
காதலில் பட்டுத்தெறித்தது அன்பில்
காந்தமாய் காதலரையே! உயிரில் காதலின்பம்
கவ்வியது அன்றோ அந்திமாலையிலே!

வாய்பேச்சு இல்லாமலே!--காதலியே
பாசத்தோடு -அவளும் காதலன்
தோளில் தவழ்ந்தாளே!=அவனும்
தென்றலாய் அணைத்தானே!
ஆற்று நீராய் அவனின் நெஞ்சில்--காதலி
அவளும் பாய்ந்தாளே!
அவன் அள்ளினான் அவளோ
அமுதாய் துள்ளினாள் தேனாய்
அருகினில் இனித்தாளே!-அவனோ
சீண்டலில் கிள்ளினான் அவளோ
நீரூற்றாய் கிளர்ந்தெழுந்தாளே!
அவனோ அன்பென்றான் -அவளோ!
ஆருயுர் என்றாள் -அவனோ
கூந்தலை கோதிஅவளின் செவ்விதழினில் முத்தமிட்டான்!
காதலி அவளோ காதலன் அவனை இறுகக் க்ட்டிக் கொண்டாளே!

விடியும் வரையினில் காமன் விளையாட்டு--பொழுது
புலரும் வரையினில் காதல் பண்பாட்டு--அந்த
மன்மத பாடத்துக்கு -காதலரே!
கருத்தாழம் கண்டனரே!
காதலன் அவனோ
காதலி அவளை!
கணப்பொழுதும் பிரியேன் என்றானே!
காதலி அவளோ
கோடிப் பிறவி இருந்து எடுத்தாலும்
காதலன் அவனே அன்புக் கணவன் அறிவுத் துணைவன் என்றாளே!

Friday, May 6, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-”கூடலும் ஊடலும் காதலுக்கு உரமாகுமே!”--’

கூடலும் ஊடலும் காதலுக்கு உரமாகுமே!இந்த
கூடாத பிரிவுதான் இனிமைக்கு பகையானதே!-அவனைக்
காணாத நாளெல்லாமே தனிமைக்கு உணவானதே!-அவனைக்
காணுகின்ற நாள்வரையில் இன்பத்துக்கும் தூரமானதே!

அவளின் மேனி எழிலே!
அன்பு பசலை பூத்து அழகற்றுப் போனதேனோ?
அவளின் பருத்த மூங்கிலாம் தோள்களே!
அழகிழந்து மெலிந்து வளைகள் எல்லாமே
அங்கொன்றும் இங்கொன்றும் கழன்று ஓடுவதேனோ?
அவளின் கண்கள் ஒளியிழந்து போனதேனோ?
அந்த காதகன் அன்புக் காதலன்
இங்கு வந்து சேர்ந்த பாடில்லையே!
அவனைப் பிரிந்த காலமெல்லாமே
எமனை நோக்கும் நரகமானதே!

கூடலும் ஊடலும் காதலுக்கு உரமாகுமே!இந்த
கூடாத பிரிவுதான் இனிமைக்கு பகையானதே!-அவனைக்
காணாத நாளெல்லாமே தனிமைக்கு உணவானதே!-அவனைக்
காணுகின்ற நாள்வரையில் இன்பத்துக்கும் தூரமானதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-”அவளின் தமிழமுத வாய்மொழியே! கேட்பதற்கே இனிமையானதே”’

இளந்துள்ளலாலே! மானானவளே!அவளின்
இனிமையாலே ! குயிலாகிப் பேசினாளே!அவளின்
மென்மையாலே! மலராகிச் சிரித்தாளே!அவளின் தமிழமுத
வாய்மொழியே! கேட்பதற்கே இனிமையானதே!அந்த
சலசலவென மடைகளில் ஓடும் குளிர் நீரின் ஓசையே
கலகலவென காண்பதற்கும் கேட்பதற்கும் இனிமையானதே!
அவையெல்லாம் அவள்சிரிப்பினில் காணாமல் போனதே!
அவையெல்லாம் அவள் அழகினில் சொல்லாமல் போனதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/”-தனிமையிலே மாலையும் வந்தாளே!”-””--’

தனிமையிலே
மாலையும் வந்தாளே!-இந்த
மங்கைபடும் பாடு சொல்லி மாளவில்லையே!

தண்ணிலவும் வாட்டுதடி--வான்
தாரகைகளும் கண்சிமிட்டி
கேலிகளும் செய்யுதடி!-எந்தன் மேலே
தென்பொதிகை தென்றலுமுமே
தீ” நெருப்பை அள்ளி வீசுதடி!--தனிமையிலே
மாலையும் வந்தாளே!-இந்த
மங்கைபடும் பாடு சொல்லி மாளவில்லையே!-தலைவன் அவனை
கூடாவிட்டாலும் பரவாயில்லையென்று-அந்த காதல் மன்னனை
தூர நின்று பார்த்தாலே போதுமென்று-அதனாலே மனதினிலே
தோன்றும் நிம்மதியென்று--காதல் தலைவியே!
மயக்கும் மாலைப் பொழுதினில் கலங்கி
மயங்கி தயங்கி தனியாய் நின்றாளே!

தண்ணிலவும் வாட்டுதடி--வான்
தாரகைகளும் கண்சிமிட்டி
கேலிகளும் செய்யுதடி!-எந்தன் மேலே
தென்பொதிகை தென்றலுமுமே
தீ” நெருப்பை அள்ளி வீசுதடி!--தனிமையிலே
மாலையும் வந்தாளே!

Tuesday, May 3, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-கவிதை என்பது அந்தக் காதலைப் போலவே!””

கவிதை என்பது..அந்தக் காதலைப் போலே!.. அது ஒரு அன்பின் எல்லையான காதலே. காதலுக்கு பேதங்கள் இல்லை. இவர்தான் காதலிக்கவேண்டுமென்று எவரையும் சொல்லிவிட முடியாதே!. அது போல் தான் கவிதையுமே!.
கவிதை என்பது அந்தக் காதலைப் போலவே !
கவிதை என்றால் கண்ணதாசனும் வண்ணதாசனும் விஜயும் பழனிபாரதியும்
கம்பதாசனும் கல்யாணசுந்தரமாம் மக்கள் கவிஞனும்,தமிழ்பாலாவும் மட்டுமே எழுதிடவேண்டும் என்பதில்லையே!
கவிதை என்பது அந்தக் காதலைப் போலவே!
அந்தப் பூவுக்குள்ளும் இருக்கும்.-காதலாய்
அன்று பார்த்த அவளின் கண்ணுக்குள்ளும் இருக்கும்.
அந்தக் காட்டுக்குள்ளும் இருக்கும்
அந்த கானக் குயிலுக்குள்ளும் இருக்கும்
அந்தத் தென்னங்கீற்றிலும் இருக்கும்
அந்தக் காற்றுக்குள்ளும் இருக்கும்-காதலி
அவளின் நெஞ்சுக்குள்ளும் இருக்கும்
அந்த வானத்திலும் இருக்கும் -காதலன்பாகவே!
அதுவே எல்லாருக்கும் பொதுவானது. அது அந்த தென்றலைப் போலவே
தினம் தினம் வந்து கவிதையாகியே காதலிக்கும் நெஞ்சங்களையே தாலாட்டிடுமே!.