காதல் உறவுக்கு எதுவும் எதிரில்லை தானே -அதையே நானே
கடைக்கண்ணில் கண்டு கொண்டேனே!
வானின்று அழைக்கும் மழையினைப் போல்
தானின்று அழைத்தாள் எனதன்புக் காதலியே!மெய்யாலே
நானின்று அழைப்பது காதலன்புக் கருதியே!
கண்ணகத்து நின்று நானும் காதலித்தேனே!-சேர்ந்தே
பண்ணகத்து இசையாய் அவளும் காதலித்தாளே!-இருவரும்
விண்ணகத்து மீனாய் இணைந்து ஒளிர்ந்தோமே!
மண்ணகத்து பயிராய் சேர்ந்து அசைந்தோமே!
விதிவழி என்பது வாழ்வெல்லை இல்லையே!
விதியை எண்ணி வீழ்வதிலே இன்பமில்லையே!-பிறர்
துதிபாடும் வாழ்வு என்பது வாழ்வில்லையே!தனியுடைமையே!
கதியேன்பது ஒருசமூகத்தின் உயர்வில்லையே!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
உங்களை பற்றி நாளை பதிவு போடுகிறேன்..அனுமதி இல்லாமலேயே...குறை நினைக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
புதிர்போடும் எனது தோழமைக்கு ! உமது சமூகத்திற்கான ஆக்கப் பூர்வமான விமர்சனம் என்றால் மகிழ்வேன்! எனது நல்ல மக்கள் இலக்கிய முன்னேற்றத்திற்கு என்னை குட்டுவைத்தாலும் அதைவிட மகிழ்வேன்!
நான் உங்கள் வலைதோட்டத்து குயில் ஒழுங்காக பாடு என்று ஆணையிட்டாலும் அதை முடிந்த அளவு நல்ல முன்னேற்ற ராகத்தோடு பாட விளையும் செங்குயிலாக நான் பாடி வருவேன் எல்லோரும் மகிழ்வுற்று வாழ்வதற்காகவே!
தோழமையுடன் ,
தமிழ்பாலா--------
Post a Comment