[கவிதை]
கண்டதேகண்டுங் கேட்டதேகேட்டுங் கழிந்தனவே நாளெல்லாம்,
கொண்டதே கோலம் தனியுடைமை கொள்கையே அதிகாரமென ஆள்கின்றதே அரசெல்லாம்,
வாக்குதனை காசுக்கே விற்றுவிட்டு ஏமாற்றும் மனிதரிடம் ஏமாந்து போனோமே!
இனியொரு விதிசெய்வோம் மக்கள்ஜன நாயகம் புரட்சிசெய்குவோம்!
யாவரும் மகிழ்ந்தும் யாவரும்வாழ்ந்தும் யாவரும் உறவாயும்,
யாதும் ஊரே யாவரும் சுற்றத்தாரே எல்லா மக்களும் நம்மக்களே!இம்மண்ணில்
எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும்
என்றவொரு உயரிய பொதுவுடைமைத் தத்துவத்தை உயர்த்திப் பிடித்திடவேண்டாமா?
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
என்னய்யா நீங்கள்!!எத்தனை கவிதைகள்!!அத்தனையும் முத்துக்கள்!!
உங்களுக்கான அங்கீகாரம் ஏன் இன்னும் கிடைக்கவில்லை இந்தியாவில்??
தாய் நாட்டின் மீதான பற்றே பற்று...உங்களுக்கல்லவா பத்ம விபூஷன் விருது வழங்க வேண்டும்!!
உங்கள் படைப்புகள் என்னை மெய் சிலிர்க்க வைக்கின்றன நண்பரே!!
உண்மையான படைப்பாளியை உலகம் அறியாமலேயே சுழல்கிறது..!
அன்புத் தோழருக்கு ,தமிழ்பாலா
நண்பரே அங்கீகாரம் என்பது அரங்கத்திருந்து அம்பலத்தில் வரும் நாள் தான் நாம் மக்களுக்கு எழுதும் நல்ல படைப்புக்களை மக்களுக்கு கொண்டுசெல்லும் கடுமையான வேள்விதனை பெரும்பகுதி படைப்பாளிகள் அனுதினமும் போராடிக் கொண்டு இருக்கிறார்கள் .படைப்பாளிக்கு அங்கீகாரம் என்பது ஒரு சால்வையிலோ! ஒரு பட்டத்திலோ!.ஒரு பதவியிலோ! முடிந்துவிடும் நிகழ்வுகள் அல்ல நாம் படைக்கும் படைப்புக்கள் மக்களுக்கு நன்மைசெய்யும் படைப்பா?அல்லது ஊறுசெய்யும் படைப்பா என்று ஆய்ந்து நல்ல படைப்புவிதைகளை நல்ல வடிவத்தோடு,சொல்லோடு,செயலூக்கம் தரும் கருத்துக்களோடு படைப்புக்களை படைத்துவிட்டாலே உண்மையான அங்கீகாரம் ஆகிவிடும் ,வெறும் பயனின்றி எழுதிடும் எழுத்துக்கள் என்றும் வரலாற்றில் நின்றதுமில்லை இன்னும் நின்றிடப் போவதில்லை.உங்களின் ஆசைக்கு எனது வாழ்த்துக்கள் .எனக்கு விருதுகள் தேவையில்லை உங்களைப்போல நல்ல படைப்பாளிகளின் நல்ல படைப்புக்களே எங்களைப்போன்ற மக்களுக்கான ,மக்களின் நலனுக்கான போராளிகளுக்கு மிகச்சிறந்த விருதும்,பட்டங்களும் ஆகும்.
உலகம் உன்னை அறியுமோ அறியாதோ என்று உனது படைப்புக்களை அரைமனதோடு எழுதாதே உன்னுயிர் உள்ளவரை உலக நன்மைக்காக உன்னதமான படைப்புக்களை படைப்பதற்கு கண நேரத்தையும் விட்டுவிடாதே!
அன்புடன் ,.
தமிழ்பாலா
Post a Comment