Popular Posts

Tuesday, December 29, 2009

அவள் அழகினில்,அறிவினில், மயங்கியே! நின்றேன் பறிகொடுத்தேன் என்னெஞ்சினையே!பிரபஞ்ச அருவியாகவே! பாய்ந்துவரும் ஆனந்தத்தின் வசமா னேனனே!

சேயிழையாள் ஆடுகின்றாள் அவள் அழகினில்,அறிவினில், மயங்கியே!
நின்றேன் பறிகொடுத்தேன் என்னெஞ்சினையே!பிரபஞ்ச அருவியாகவே!
பாய்ந்துவரும்
ஆனந்தத்தின் வசமா னேனனே!
ஓடையின் ஓரமே! உயர்மாமலர்ச் சோலைக்குள் நிழல்தேடியே என்னைக்
கோடையும் துரத்திடுதே!-ஆனாலும் வான ஊர்தி ஏறி இந்த வான்மீதில் பறந்திடவே
வளரும் அறிவியல் உண்டே!காதலி அவளின்
சின்ன இடுப்பு நெளிவ தென்ன
சித்திரப் புழுப் போலவே
அவள்
கண்ணில் கண்ட இந்த அத்தானுக்குக்
கலங்கியதோ அவளின் சிந்தை தானே! அவளின்
இதழில் மொய்த்ததுவே எண்ணிலா வண்டுகளே!

No comments: