காதல் வான்தேன் கலக்கும் பொன்மாலைப் பொழுது
காதலர் மனதில் அன்பு பிறக்கும் தென்றல் அணைக்கும்
கடற்கரை மணலில் கால்கள் தழுவும் இன்ப முத்தம்
காலங்கடந்தும் அலைகள் பேசும் இனிய மொழியில்
காலத்தை மறக்கும் கனவுகள் வானில் பறக்கும்
கானலில்லை காதலென்று கண்கள் நான்கும் ஒன்றாகும்
பாலுணர்வு மட்டும் காதலில்லை என்று பகுத்தறிவு உணர்த்தும்
பகுத்துணரும் வாழும் தத்துவம்காண நினைவுள் நினைவுறுத்தும்
நேசங்கள் நெருங்கினாலும் பொருளாதாரம் அச்சம் கொடுக்கும்
சேர்ந்த காதல் ஒன்றிவிட்டால் எந்த அச்சம் எதிர் நிற்கும்?
சேர்ந்துழைக்கும் ஒற்றுமையில் குடும்ப உறவு சிறக்கும்
சேர்ந்துழைப்பது வாழ்வுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் -என்ற போராடும்
சீரான கொள்கையிலே இல்லறமே நடைபோடும்!
No comments:
Post a Comment