இமையசைத்தும் இதழ்முறுவலித்தும் பேசியதென்னவோ?-காதலி நீயே!
நோக்கரிய நோக்கானவளே நுணுக்கரிய நுண் உணர்வானவளே!-காதலின்போக்கும் வரவும் புணர்வும் வாழ்வியலின் இலக்கணமோ?-காதலி நீயே!
வாழும் வாழ் நாளெல்லாம் வளர்கின்ற இலக்கியமோ? உன் நேசவிழியே!
ஆற்றின்ப வெள்ளமாய் அனுதினமும் நினைவினில் பாய்ந்திடுதோ? -காதலி நீயே !
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாமலே சொல்லிடும் நுண் உணர்வானவளோ?
No comments:
Post a Comment