Popular Posts

Wednesday, January 26, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-கட்டாயத்தை மீறிவரும் காதலுக்கு:


உன்பெயரும் என்றும் ரசிக்கின்ற ஒருகவிதை தானடி
ஆனாலும் உன்பெயர்போல் எந்த கவிதையும் இனிப்பதில்லையே!
தோல்வி என்னும் புள்ளிகள் இன்றியே
வெற்றியென்னும் கோலங்களே இல்லையே!-உன்னையே
தொடர்ந்து வந்து எனது காதல்தனையே சொல்லிடுவேனே!
காதலிக்க நீயும் மறுத்தாலும்
கட்டாயத்தில் வருவ்தில்லை காதலென்று
கட்டாயத்தை மீறிவரும் காதலுக்கு கொடியசைப்பேன்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதலை நீமறைத்த போதிலுமே::

என்னை நீயும் பாராது இருப்பது போலவே!
காதலை நீமறைத்த போதிலுமே =உனது கண்கள்
காட்டிக் கொடுத்துவிடும் அன்புக் காதலியே!
நீயென்னவோ உண்மைக் காதல்தன்னையே
நெஞ்சார நினைக்காமல் ஒளித்த போதிலுமே
உன் தும்மல் வந்து சொல்லிக் கொடுத்திடுமே!
நான்விரும்புகின்றது எதுவாக இருந்தபோதிலுமே
அன்பே நீ அதுவாக மாறி தினமும் தித்திப்பதென்ன?


தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதல்தான் உலகமென்று தாடிவளர்த்த :”!

நீ நான் காதல் தான் உலகம் என்று எண்ணி
வாழ் நாளை வீணாக்கி விடாதே!
அதையும் தாண்டி வாழ்வென்னும் பிரபஞ்சம்
இந்த வாழ் நாளிலே வசந்தமாய் காத்திருக்கின்றதே!
காதல்தான் உலகமென்று தாடிவளர்த்த காதலரே!
கைபிடிக்கும் திருமணமும் தொடரும் வாழ்வினில் என்பதையே
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ் காரமென்று உணர்ந்திடவே வேண்டாமே!
கானலிலே கனவுலகினில் காலத்தையே கழித்துவிடாதே!-காலத்திலே!
கைக்கு கிட்டும் நிஜவாழ்வினையே தெரிந்திடாமலே நீயும் தூங்கிவிடாதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/மோகனப் புன்னகையில்”

இன்று பகலிலும் ஒரு நிலவாகவே -காதலி அவளே
மொட்டை மாடியில் வலம்வந்தாளே!
என்றும் நினைவினில் அசைத்து மலரும் நினைவாகவே!
மோகனப் புன்னகையில் மெய்சிலிர்க்க
முத்த இதழ்களையே பரிசாக தந்தாளே!

Friday, January 21, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/மனிதம் வாழவளர-

இலக்கியப் படைப்பாளியே நீயே
மனிதம் வாழவளர
எதை எழுதிட வேண்டும் எதைஎழுதிடக் கூடாதென்று
அதை நீதீர்மானிக்கும் வல்ல்மை பெற்றிட வேண்டுமடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதலியே முன்னுரையாய் ::

பாடுகின்ற பாடலின் முதல்வரி முதன்மையானதே!
காதலியே முன்னுரையாய் முற்றிலும் இனிமையானவளே!
மனதினையே மொழியாலே மீட்டிட நீ வந்தாயோ?- இல்லை அன்புக் காதலாம்
மொழியினிலே மனதினையே மீட்டிடத்தான் வந்தாயோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”காதலாம் வாசிக்கின்ற இன்பதன்மை”

உன்மவுன இதழின் மழைகள்
என்றும்
என்னை நனைத்திட போவதில்லையே!-
அடியே காதலியே! இந்த மண்ணில்
சுகமென்று சொல்வது ஒன்றுதானடி-அதுவே
அன்பாம்
புத்தகங்களைப் படிக்கின்ற இனிமையான-காதலாம்
வாசிக்கின்ற இன்பதன்மைத் தானடி

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/சினந்து சிவந்து சிரித்தது செவ்விதழ்களே!தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-

பொய்யாய்
சினந்து சிவந்து சிரித்தது செவ்விதழ்களே!
மண்ணிலும் சருகிலும் காற்றிலும் மலர்த்தேனினை மணத்திலே
அள்ளி அள்ளித் தெளிக்கின்றனவே!
மெய்யாய்
அந்தப் பருவ இனிய நாடகத்துக்கு
என்னதான் அர்த்தமென்று யாருக்கும் புரியவில்லையே!

Monday, January 17, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-இலக்கிய வித்துக்களோ?!

கீழ்வானில் செம்பரிதிக் கோலமே!
கீழைச்சூரியன் கீழ்வானத்திலே!-கடலோடு காதலாகி
எழுதிப் பார்ப்பதென்ன? ரகசியக் முத்தங்களோ? இலக்கிய வித்துக்களோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-!பிறப்புமுதல் இறப்புவரை போராடும் !

முடிந்துபோன இளமையின் மாறிப்போன கருமையில்
விஞ்சி நிற்கும் வெண்மையே!
முகமாறிப் போனபோதும் முகவரிமாறாத மனிதமே!-மேனி
முற்றிப் போனபோதும் மனதினில் இளமை மாறாத மனிதர்களே!
பிறப்புமுதல் இறப்புவரை போராடும் உலகஜீவ ராசிகளே!
பின்னும் முன்னும் நடப்பதும்நடந்ததும் அறியாத உயிர்களே!~
ஒன்றுபட்டு முன்னேற எண்ணாமலே உலகினிலே - நீங்கள்
துண்டுபட்டு நிற்பதுதான் ஏனென்று உணர்ந்தீரா?

Saturday, January 15, 2011

தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/- *காதல்மழை

நீ வானமானாய்
நான் துளியானேன்
மெல்ல பொழிந்தது
காதல்மழை

நீ மவுனமானாய்

நான்மொழியானேன்

புன்னகை மலர்ந்தது

நெஞ்சில் தேன்

நீ உயிரானாய்

நான் துடிப்பானேன்

அன்பே அணைத்தது

வாழ்வினில்இன்பம்!

*

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதலன்பே தேனானதே!

காதலிலே!
காதலன் நான்
நானாக இருக்கின்றேன் அதற்கு காதலி
நீதானே முகவுரை தந்தாயே
நீ நீயாக இருப்பதற்கு என்னன்பினையே நான் உனக்குத் தந்தேனே!
காதலராய்
நாம் நாமாக இருப்பதற்கு
காதலன்பே தேனானதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/தேன் தமிழின் இலக்கணமென்ன?

கண்ணனுந்தன் கண்களையே காண்கையிலே
காதல்மனம் நெஞ்சினிலே சொல்வதென்ன?
வண்ணத்தமிழ் காவியத்தை நான்படித்திடவே!= நீயும் அன்பாலே
வந்துசொன்ன தேன் தமிழின் இலக்கணமென்ன?







தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”

Saturday, January 8, 2011

தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-திரும்ப நீயும் எழுகின்றாய் !

அன்பு எனும் ஆறு கரை அது புரளும்-இன்பக் காதல்

உறவே போற்றுகின்றேன் இனிய உயிரே உன்னையே போற்றுகின்றேன்=என்னெஞ்சில் என்றும் நீ

வாழ்கின்றாய் வாழ்த்தாத நெஞ்சங்கள் இருந்தால்தான் என்ன?

ஆழ்கின்றாய் அலைபாயாத நினைவினிலே மெய்யினிலே
சூழ்கின்றாய் சூழ்ச்சியானாலே
வீழ்கின்றாய் இருந்தாலும் திரும்ப நீயும்

எழுகின்றாய் !

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதல் வான்தேன் கலக்கும் பொன்மாலைப் பொழுது !

காதல் வான்தேன் கலக்கும் பொன்மாலைப் பொழுது

காதலர் மனதில் அன்பு பிறக்கும் தென்றல் அணைக்கும்

கடற்கரை மணலில் கால்கள் தழுவும் இன்ப முத்தம்

காலங்கடந்தும் அலைகள் பேசும் இனிய மொழியில்

காலத்தை மறக்கும் கனவுகள் வானில் பறக்கும்

கானலில்லை காதலென்று கண்கள் நான்கும் ஒன்றாகும்

பாலுணர்வு மட்டும் காதலில்லை என்று பகுத்தறிவு உணர்த்தும்

பகுத்துணரும் வாழும் தத்துவம்காண நினைவுள் நினைவுறுத்தும்

நேசங்கள் நெருங்கினாலும் பொருளாதாரம் அச்சம் கொடுக்கும்

சேர்ந்த காதல் ஒன்றிவிட்டால் எந்த அச்சம் எதிர் நிற்கும்?

சேர்ந்துழைக்கும் ஒற்றுமையில் குடும்ப உறவு சிறக்கும்

சேர்ந்துழைப்பது வாழ்வுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் -என்ற போராடும்

சீரான கொள்கையிலே இல்லறமே நடைபோடும்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-மாசில்லாத காதலன்பின் வெற்றிதானே!

என்னருமைக் காதலியே இளமை ஓவியமே அன்பு இலக்கியமே இன்பக் காவியமே!முள்ளை முள்ளால் எடுப்பது போலவே விஷத்தை விஷத்தால் முறிப்பது போலவே!
கண்ணாலே நீ சொல்லிய சொல்லிய காதல் பாட்டின் பொருள் உணர்ந்து-காதலையே !கண்ணாலே நானும் சொல்லிட சொல்லிட வந்தேன் என்னருமைக்காதலியே !
இளமை ஓவியமே அன்பு இலக்கியமே இன்பக் காவியமே!
கண்ணுக்குள் அது என்ன?பூகம்பம் நெஞ்சுக்குள் தென்றலாகிப் போனதே!
மண்ணுக்குள் பொன்னாகும் மாசில்லாத காதலன்பின் வெற்றிதானே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதலியுன்-அன்புப் பார்வையே !

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத காதலியுன்-அன்புப் பார்வையே
இமையசைத்தும் இதழ்முறுவலித்தும் பேசியதென்னவோ?-காதலி நீயே!
நோக்கரிய நோக்கானவளே நுணுக்கரிய நுண் உணர்வானவளே!-காதலின்
போக்கும் வரவும் புணர்வும் வாழ்வியலின் இலக்கணமோ?-காதலி நீயே!
வாழும் வாழ் நாளெல்லாம் வளர்கின்ற இலக்கியமோ? உன் நேசவிழியே!
ஆற்றின்ப வெள்ளமாய் அனுதினமும் நினைவினில் பாய்ந்திடுதோ? -காதலி நீயே !
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாமலே சொல்லிடும் நுண் உணர்வானவளோ?

Thursday, January 6, 2011

தமிழ்பாலா=காதல்/கவிதை/தத்துவம்/=.விளை நிலமெல்லாம் வீட்டுமனையானதாலே.

விண்ணைத்தொடும் விலைவாசி
வேதனையில் குடித்தனவாசி
விளை நிலமெல்லாம் வீட்டுமனையானதாலே!
விளைச்சலெல்லாம் வெகுதூரமாச்சே!-அதன்
விளைவுதான் இப்பொழுது பொல்லாத பொழுதாச்ச-பணவீக்கத்தினாலே
வாங்கும் சக்தி ஏற்கனவே இல்லாம போச்சே..-இந்த பாழாப்போன விலைவாசியாலே=எங்கள்
வாழ்வாதாரமே இன்பத்துக்கு கானல் நீராச்சே

முப்போகம் விளைந்த நிலமெல்லாமே காணாமல்தான் போயாச்சே!
முக்காலும் எல்லாமும் மனையிடங்களாகவே மாறியாச்சே!-இங்கு
எங்குபார்த்தாலுமே வீட்டடிவிற்பனையே கொடிகட்டிப் பறந்தாச்சே!
உற்பத்திதான் குறைந்துபோகவே விளை நிலங்கள் குறைந்தாச்சே!

அன்று கை நிறைய காசுகொண்டு சென்றாலோ பை நிறைய காய்கறி வாங்கியது அந்தக்காலம்
இன்றோ பை நிறைய காசுகொண்டு சென்றாலுமே கை நிறையக்கூட காய்கறி இன்றி வருவது இந்தக்காலம்!
விலைகள் உயர்ந்த அளவுக்கு மக்களுக்கு சம்பள உயர்வு இல்லாமல் இருப்பது கொடுமையாச்சே!
வேதனையில் பொழுதுபோக்கும் சினிமாவும் கட்டணம் கூடியாச்சே!@
-விலைவாசி இறங்கவில்லை என்றால் வரும் தேர்தலில் ஆட்சியாளர்கள் இறங்குவார்கள்
விலைவாசி இறங்கிடவே வழிபிறக்குமோ?
ஆட்சிகள் மாறினாலும் நிலையான கொள்கையில்லாத் தலைமை இருக்கின்ற வரையினில்
எந்த விலையும் எப்போதும் குறைந்திடவே வழியிங்கு பிறந்திடப் போவதில்லையே!.

தமிழ்பாலா=காதல்/கவிதை/தத்துவம்/=..