Popular Posts

Monday, February 28, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தாலாட்டு/அன்பு/-”இல்லாமை இல்லாத வீட்டை உருவாக்கும்”

அம்மா எனக்கு வேணுமே-அன்பாலே
ஆசைமுத்தம் தரணுமே!-என்னையே
உச்சி முகந்து ஆசையாய்-தினமும்
உவந்து அணைத்து கொள்ளவே
அம்மா எனக்கு வேணுமே-அன்பாலே
ஆசைமுத்தம் தரணுமே!


அழுத கண்ணீர் துடைக்கவே-தாய்
அழுதால் என்னைக் கொஞ்சவே!-காலை மாலை
பூவும் பொட்டும் எனக்கிட்டு-தங்கமாய்
பூப்போல் என்னைக் கொஞ்சவே!
அம்மா எனக்கு வேணுமே-அன்பாலே
ஆசைமுத்தம் தரணுமே!

பள்ளி செல்லும் போதிலே!-சிரித்து
பையைத் தோளில் மாட்டவே!- நானும்
பள்ளி முடிந்து வருகையில்-கனிவாக
பார்த்து வாசல் நிற்கவே!
அம்மா எனக்கு வேணுமே-அன்பாலே
ஆசைமுத்தம் தரணுமே!
இல்லாமை
இல்லாத வீட்டை உருவாக்கும்
திரு நாட்டை உருவாக்கும்
என் தாயின் மணிமொழி
எனக்கு வேதமந்திரமாகணுமே!

அம்மா எனக்கு வேணுமே-அன்பாலே
ஆசைமுத்தம் தரணுமே!-என்னையே
உச்சி முகந்து ஆசையாய்-தினமும்
உவந்து அணைத்து கொள்ளவே
அம்மா எனக்கு வேணுமே-அன்பாலே
ஆசைமுத்தம் தரணுமே!

No comments: