காதலர் தினமே எது காதல்?
காதல் நேர்மையின் இலக்கணமானால் கரைசேரும்!
காமத்தின் வசப்பட்டால் காதல்தளிர் பட்டுப்போகும்!
காதல்மதம் சாதி,மொழி,இன,பிரபஞ்சத்தை கடந்ததல்லவா?-எதிர்க்கும்
மனிதர்களையும் எதையும் அலட்சியம் செய்துவிட்டு-உண்மைக்காதல்
மனதைமட்டும் தேடுகின்ற ஒப்பற்ற புனிதமானது காதலலல்லவா?
காதலின்போது ஆயுதம் தூங்கினால் பரவாயில்லையே
காதலன்புக்கு அறிவுதூங்கிவிட்டால் காதலாகாது!
காதல் மனதினைவருடும் இளந்தென்றலாகுமே!-அங்கே
காமம் என்ற வன்முறைக்கு ஒருபோதும் இடமில்லையே!
காமத்திற்கு தலையசைத்தால் அதுகாதல் ஆவதில்லையே!
கண்கள் பேசியதும் கட்டியணைப்பது காதலல்லவே!
கல்யாணம் வரையினில் பொறுமை காப்பது மெய்யான காதலாகுமே!
காதல் என்பது இயற்கையான ஒருஇன்ப நிகழ்வு ஆகுமே!
காதலர்தினம் என்பது காலங்காலமாய் வந்த மரபுதானே!
காதலர்கள் திருமணத்திற்குப்பின் கொண்டாடுவதும்
காதலர் தினத்திற்கு ஒருபுத்துணர்ச்சி கொடுத்திடுமே!
காதலர்தினத்தில் பொதுஇடத்தில் கட்டிப்பிடித்து இருப்பது
கலாச்சார சீரழிவுக்கு கொண்டுசெல்லும் அவலம் அல்லவா?
காதலினை தேர்ந்தெடுத்து காதலிக்கவேணும்
காதலித்த பின்னே காலமெல்லாம் சண்டையிடக் கூடாதே!
காதலித்த போது இனிக்க இனிக்க பேசியதே
காதலுக்குப் பின்னும் சந்தோசம் தொடருனுமே!
காதலிலே நிதானமாகவே யோசித்து காதலர்கள்
காதலன்,காதலியை தேர்ந்தெடுப்பது அவசியமாகுமே!
காதலென்பது வீட்டைவிட்டு ஓடிபோவது அல்லவே
காதலென்பது வீட்டிலிருந்து போராடிச் ஜெயிப்பதாகுமே!
காதலின்வெற்றி பிரச்னைகளை தோல்வியடைய வைப்பதாகுமே!
காதலர்காட்டும் அன்பினை ஒருபோதும் எல்லைமீறிவிடக் கூடாது!
காதலர்களுக்குள் தாய்,தந்தைபோல் பாசத்தை காட்டிடவேண்டும்!-எல்லை தாண்டிய
காதலுக்கு வாழும் சமூகத்தில் என்றும் தோல்விதானே!~
காதலுக்காக கல்வியை கோட்டைவிட்டால் காதல் ஜெயிக்காதே!
காதலிலே எல்லைமீறி தற்கொலை என்பது கோழைத்தனம் ஆகிடுமே!0மாணவப் பருவத்துக்
காதலென்பது சமூகத்தில் உண்மைக் காதல் ஆகாதே!
எது காதல்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment