புதுமைதனை நாடுகின்ற நெஞ்சங்களுக்கு
பூக்கள் பாடவந்தது பூபாளமே!
வந்த மனம் கிறுகிறுக்கு தடி!
வசந்தமுகம் ஒளிசுரக்குதடி!-அன்புக்
காதலே !இன்ப நேசமே!
பூவிடை ஊறிய தேனாகுமே!
பொன்னிடை ஏறிய சுடராகுமே!
மாவிடை மாறிய சுவையாகுமே!
நாவிடை பாடிடும் இசையாகுமே!
எண்ணே எழுத்தே இன்பத்தமிழே!
பண்ணே பாவே பைந்தமிழே!
பணிவுடன் உந்தன் தாள் வணங்குகின்றேனே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment