Popular Posts

Saturday, February 12, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்-/-எதிலும் சரிபாதி எதிலும் சரிபாதி

எதிலும் சரிபாதி எதிலும் சரிபாதி
இருள்பாதி ஒளிபாதி
ஆண்பாதி பெண்பாதி-காதலிலே
கண்பாதி இதழ்பாதி பேசிடுமே!

நன்மைபாதி தீமை பாதி
துன்பம்பாதி இன்பம்பாதி-வாழ்வினிலே
முதல்பாதி இளமை மறுபாதி முதுமை
பாதி நாள் விழிப்பு மீதி நாள் தூக்கம்
தூக்கம்பாதி ஏக்கம்பாதி
துயரம்பாதி சந்தோசம் பாதி-உலகமெல்லாம்
வரவுபாதி செலவுபாதி
உறவுபாதி பகையும் பாதி
உண்மைபாதி பொய்மைபாதி

எதிலும் சரிபாதி எதிலும் சரிபாதி
எதிலும் சரிபாதி எதிலும் சரிபாதி

No comments: