கலப்படத்தை தடுத்திடவே விரைந்திடுவோம்!
கண்ணான நன்னாளை உருவாக்கிடுவோம்!
கலப்படமாம் கலப்படமாம் இந்த உலகினிலே!வாழும் மக்களின்
கனிவான வாழ்க்க்கைக்குத் தான் உலை வைத்திடும் வாழ் நாளிலே!
பாலிலே கலப்படமே வயிற்றுப் போக்காக்கிடுமே!
தேயிலையில் கலப்படமே புற்று நோய் உருவாக்கிடுமே!
கடலை,துவரைப் பருப்பினிலே கேசரிப் பருப்பினைக் கலந்தே
கடைதனில் விற்கின்றார் அதுமனிதர்க்கு கீல்வாதம் உண்டாக்கிடுமே!
மஞ்சள் தூளினில் கலப்படமே ரத்தசோகைதனை கொடுத்திடுமே!~
பசியின்றி புற்று நோய் தாக்கிடவே உடலில் இடம் கொடுத்திடுமே!
இனிக்கின்ற மிட்டாயும் இரசாயண பானங்களும்
மனிதர்க்கு கல்லீரலைத் தாக்குகின்ற நோயாக்கிடுமே!
கள்ள சாராயம் காய்ச்சிடுவார் சமூகவிரோதிகளே-அவரே
நோய்தீர்க்கும் மருந்தினிலும் கலப்படம் செய்திடுவாரே
நாளான மருந்தினையே காசாக்குகின்ற நயவஞ்சகரையே
தூக்கிலிடும் சட்டங்கள் இன்னாட்டினில் வரவேண்டுமெ!
காப்பிதனில் புளியங்கொட்டை உளுந்தின் தூள் கலந்திடுவார்
காதகரின் இழிசெயலாலே வயிற்றுக்கோளாறே உண்டாகிவிடுமே!
கலப்படத்தை தடுத்திடவே விரைந்திடுவோம்
கண்ணான நன்னாளை உருவாக்கிடுவோம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment