பசிக்கும் அழுதது நானடா
வலிக்கும் முனகியதும் நானடா!
காதலுக்கும் ஏங்கியதும் நானடா!
உணர்வினில் துடித்ததும் நானடா!
உண்மைக்கு போராடியதும் நானடா!
பொருளுக்கு தவித்ததும் நானடா!
புரட்சிக்கு சீறியதும் நானடா!
புதுமைக்கு விழித்ததும் நானடா!
பழமையை படித்ததும் நானடா!
மனிதத்தை வாழவைக்க செயல்படும்
மக்கள் ஜன நாயகமும் நானடா!
மனித நேயத்தை காப்பதும் நானடா!
மெய்யான சுதந்திரம் வேண்டுவதும் நானடா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment