இனி தனிமையில்லை இனிமைக்கும் பஞ்சமில்லை
இனி வாழ் நாளெல்லாம் தேன்சிந்தும் தெம்மாங்குதான்!
கொட்டட்டும் கொட்டட்டும் வானம்
குளிரட்டும் குளிரட்டும் மேனி
கட்டட்டும் கட்டட்டும் கைகளே-காதல்
கரைசேரட்டும் சேரட்டும் அன்பினிலே!
இனி தனிமையில்லை இனிமைக்கும் பஞ்சமில்லை
இனி வாழ் நாளெல்லாம் தேன்சிந்தும் தெம்மாங்குதான்!
வானவில்லை கையினில் எடுத்து அம்பினையே தொடுத்திடவா?
ஆழ்கடலினையே சுருட்டி எடுத்து உன்னை குளித்திட வைத்திடவா?
எந்த பிரபஞ்ச எல்லைக்கும் நாம்போய் இன்பத்தில் திளைத்திடுவோமா?
அந்த பிரமனும் இருந்தால் அவனையும் நண்பனாக்கிக் கொண்டிடுவோமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment