பூவிதழ் வருடி தென்றல் புன்னகை செய்தது அந்திமாலையிலே!-காதல்
பூவையின் இதழில் கோடிக் கவிதைகள் பிறந்தது அன்புப்பாதையிலே!
பார்வையில் படித்திடும் இலக்கியங்கள் உணர்வினில் பாடும் இதயங்களே!!
பல நாளின் கேள்விகளின் பதிலாகவே உயிரினில் கலந்திடும் உறவுகளே!
பாலுணர்வு மட்டுமே உலகம் என்று இருந்திருந்தால் வாழ்வு என்னாகும்!
வாழ்வுக்கும் அர்த்தமுண்டு வாழ்வதிலும் கருத்துண்டு இந்த உலகினிலே!
வாழுகின்ற உலகினிலே இல்லாமை இல்லாமல் வாழ்வதுதான் வாழ்வாகுமே!
ஏற்றதாழ்வு என்றானால் எல்லோரும் வாழும் வாழ்விங்கே கானலாகுமே!
தன்னலமே என்றிருக்கும் தான் தோன்றி நிலைமாற்றி உயர்வாக்கனுமே!
தனக்கென்று சேர்த்துவைக்கும் தனிச்சொத்துடைமை மாறிடவேணுமே!
தாய் நாட்டின் சொத்தெல்லாம் அதன்சேயாம் மக்களுக்கு பயனாகவேணுமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment