காதலியே!
வானம் உன் அகண்ட மேனியானதோ?
தேன்மொழியே!
விண்மீன்கள்
கண்சாடை காட்டி நின்று
என் -
உன் கனவுகளின்
கண்சிமிட்டல்களானதோ?
கண்மணியே!
நிலவே
உன் நெற்றியிலே வைத்த திலகமானதோ?
தென்றல் காற்றே
நம் காதலுக்கு துணை நிற்கும்
இதமான தாலாட்டானதோ?
மழையே
உன் கண்களின் அன்பு ரசம் சொட்டும்
பேரின்பமானதோ?
ஆதவனே
நம் கண்களில் காதல் தீபமேற்றும் நேச ஒளியானதோ?
No comments:
Post a Comment