Popular Posts

Sunday, March 20, 2011

தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / குழந்தைப்பாடல்/-”/பாப்பா பாப்பா சின்ன சின்ன பாப்பா!


பாப்பா பாப்பா சின்ன சின்ன பாப்பா
நம்ம வீட்டை சுற்றி சுற்றி விந்தை ஒலிகள் கேட்குதா?
பாப்பா பாப்பா அன்புகொண்ட பண்புப் பாப்பா
நம்ம வீட்டை சுற்றி சுற்றி விந்தை ஒலிகள் கேட்குதா?

காக்கை காக்கை கரையுதா?
காட்டு ஆந்தை அலறுதா/
மேகம் மேகம் முழங்குதா/
இடியும் இடியும் இடிக்குதா?-மின்னல் மின்னிடவே!
மழையில் மழையில் நடிக்குதா?
கிளையில் கிளையில் சிட்டுக் குருவி ஒலிக்குதா?
பச்சை பச்சைக் கிளிகளே பேசி பேசி சிரிக்குதா?
கோவில் ஆனை ஆனைகளே வீதியிலே தந்தத்தையே
ஆட்டி ஆட்டி தன் ஆனந்தத்தையே பிளிறுதா?

சேவல் சேவலே காலையில் காலையில் கூவுதா/
சேர்ந்து சேர்ந்து மயில்களும் மகிழ்வினில் அகவுதா?
மரங்கொத்தி கொத்திப் பறவைகளே
மரத்தில் உரத்துத் தாளங்கள் போடுகின்றனவோ?

ஆட்டுக் குட்டியும் மேமேயென்றே அழைக்குதா?
அண்டக் காக்கையும் காக்கையும் கரையுதா?
பாப்பா பாப்பா சின்ன சின்ன பாப்பா
நம்ம வீட்டை சுற்றி சுற்றி விந்தை ஒலிகள் கேட்குதா?
பாப்பா பாப்பா அன்புகொண்ட பண்புப் பாப்பா
நம்ம வீட்டை சுற்றி சுற்றி விந்தை ஒலிகள் கேட்குதா?













தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / குழந்தைப்பாடல்/-”

No comments: