Popular Posts

Sunday, March 27, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/-! ”மக்களே !இலவசம் என்ற பெயரில் வாங்காதீர்கள் லஞ்சம்! வாக்களிக்குமுன் சிந்தியுங்கள் கொஞ்சம்~!

மக்களே !இலவசம் என்ற பெயரில் வாங்காதீர்கள் லஞ்சம்!
வாக்களிக்குமுன் சிந்தியுங்கள் கொஞ்சம்~!= நல்ல
வேட்பாளர்க்கே வந்ததடா பஞ்சம்!உள்ளம்
பதைக்குதடா நெஞ்சம்!
இலவசம் என்பது நமைஏய்த்திடும் வஞ்சம்~!

இலவசமாய்!
எங்களுக்குத் தேவை மிக்சியும் கிரைண்டரும் அல்ல!
அதை இயக்கத் தேவையான தடையில்லா மின்சாரமே!
வேலையில்லாத இளைஞர்க்கு வேலைவாய்ப்புத் தேவையே!
கல்விகற்கும் மாணவர்க்கு கட்டணகொள்ளை இருந்து விடுதலை தேவையே!
அந்தந்த மாவட்டம் சார்ந்த தொழில்கள் விவசாயத்தை மேம்படுத்தும்
அம்சமான தொலை நோக்குப் பார்வையோடு கூடிய திட்டங்கள்
இந்த தேர்தல் வாக்குறுதிகளில் துளிகூட இல்லையன்றோ!
காரணம் நாம்தான் வாக்காளர்கள்தான் என்றால் மிகையாகாது!
நம்மலில் சிலவாக்காளர்கள்தான் குவார்ட்டர்,கோழிபிரியாணி
வீடுதோறும் வேட்டிசேலை ,மூக்குத்தி,காசுக்கும் வாக்களிக்க
நாடெல்லாம் பழகிவிட்டோமே!எதைக் கொடுத்தால்
வாக்காளர்களெல்லாம் மயங்குவார்கள் என்று இந்த முதலாளித்துவ
காசுக்கு விலைபேசும் கட்சிகளுக்கு என்ன தெரியாதா?

தேர்தலில் நிற்கும் பெரும்பாலான வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்
அடிதடி ,ஆள்கடத்தல்,கொலை,கொள்ளையில் குற்றங்களுக்காக
அடிக்கடி சிறைசென்ற தனக்காகவே உழைக்கும் தறுதலைகள்!
அதைஅறிந்தும் அவர்க்கே வாக்குகேட்டு வாக்களிக்க வற்புறுத்தும் அவலம்தான் என்ன?

இனிசாமான்யர்கள் தேர்தலில் நின்று வெல்லுவது என்பது எட்டாக்கனிதான்!
கோடிசெலவு செய்யும் பணக்காரர்கள் களத்தில் இறங்கிவிட்டாரே!-மக்கள்
சேவைசெய்ய எதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்திடவேண்டும்?
இந்தகேள்விதனை மறைப்பதற்கே இத்தனை இலவசங்கள்! இத்யாதிகளே!
இந்த மடமைதனைக் கொழுத்த எத்தனைபாரதிகள் எழப்போகின்றார்களோ?

தொகுதிமக்கள் குறைதனை அறியாத தன்னல வேட்பாளர்கள்
தொகுதி மக்கள் தொகை அறியாத கோடீஸ்வர வேட்பாளர்கள்
இலவசங்களால் ஆட்சி கட்டிலேறி மக்கள் நலன்பற்றி அறியாமலே
ஐந்தாண்டுகளும் ஓடிபோனவுடன் மீண்டும் வாக்குகேட்டு நிற்பார்கள்!
நாமும் அந்த இலவச போதைதெளிவதற்குள் வாக்குபோட தயாராகி நிற்போம்!

மக்களே !இலவசம் என்ற பெயரில் வாங்காதீர்கள் லஞ்சம்!
வாக்களிக்குமுன் சிந்தியுங்கள் கொஞ்சம்~!= நல்ல
வேட்பாளர்க்கே வந்ததடா பஞ்சம்!உள்ளம்
பதைக்குதடா நெஞ்சம்!
இலவசம் என்பது நமைஏய்த்திடும் வஞ்சம்~!
தைரியம் இருந்தால் விலைவாசியை ஒருகட்டுக்குள் வைக்கச் சொல்லுங்கள்!!
வீட்டுவரிதனை ஏற்றாமல் இருக்கச் சொல்லுங்கள்!இல்லை
எல்லாவரிகளையும் ரத்துசெய்ய சொல்லுங்கள் பார்ப்போம்!












தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/-”

No comments: