Popular Posts

Sunday, March 27, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/-” பார்வதி அம்மா பார்வதி அம்மா நீங்கள் பிரபாகரனின் தாய்மட்டுமல்ல எங்களின் தமிழீழத் தாயே !

பார்வதி அம்மா பார்வதி அம்மா
நீங்கள் பிரபாகரனின் தாய்மட்டுமல்ல
எங்களின் தமிழீழத் தாயே
எங்களின் தமிழீழத் தாயே!
!-இனி
உங்களை தரிசிப்பது எப்போதம்மா!-ஈழத்
தேசியத் தலைவனின் தாய் என்ற
அன்புவிளக்கே அணைந்து விட்டாயம்மா!
ஈழதேசம் மட்டுமல்ல தமிழ்பேசும் தேசமக்கள்

உங்களைப் பிரிந்த எங்கள் இதயத்திலெல்லாமே?
இந்தபிரிவு ஆறாத காயமே
இந்த உலகம் முழுவதும் தாயே
சோகத்துள் மூழ்கிக் கிடக்கின்றதே

இனி நீங்கள் விட்டுச்சென்ற வீரப்பயணத்தை ஈழமண்ணில் நாங்கள் தொடர்ந்திடுவோம் தாயே!
சென்று வாருங்கள் தாயே! சென்று வாருங்கள்!!தாயே இன்னும் வீரத்தாய் பரம்பரையை உருவாக்கிடுவோம் தாயே!கோடிக் கோடியாகவே!
எண்ணிலடங்காத பிரபாகரன்களையே போராளியாகவே நிமிர்ந்திடச் செய்திடுவோம் தாயே!

இன்று சோகம் படர்ந்திருக்கும்
எங்களுக்கோர் இருண்ட நாள் என்றபோதிலுமே எங்களின் மீள்போரினிலே உங்கள்
அடிச்சுவட்டினிலே மீண்டும் ஈழமண்ணில் ஈழத்தமிழரின் புதிய வெளிச்சத்தை கண்டிடுவோம் தாயே!


முள்ளிவாய்க்கால் முற்றுக்கைக்குள் சிக்கி
கொடியோரின் கோட்டைக்குள் சிக்கி சிறையிருந்தீரே எங்கள் தாயே!
நீங்கள் சிந்திய ரத்தம் ஈரம் இன்னும் ஆறவில்லையே எங்கள் தாயே!
மீண்டும் நீங்கள் ஈழ சுதந்திர மண்ணில் பிறப்பெடுத்திடுவீரே எங்கள் தாயே!

எரிக்கும் நெருப்பும் உங்களைச் சுட்டுவிடாது தாயே!
சென்று வாருங்கள் தாயே! சென்று வாருங்கள் தாயே!!!
தமிழீழத்தில் வீரத்தை விதைத்து வைத்தவரே!எங்கள் தாயே!
சரித்திரம் தாங்கும் வீரனைப் பெற்றுத் தந்தவரே!எங்கள் தாயே!
விடுதலையின் போராளியே ஈழமண்ணின் தாயே!எங்கள் தாயே!
சென்று வாருங்கள் தாயே! சென்று வாருங்கள் தாயே!!!

தூக்கி அணைத்த ஈழப்பிள்ளைகள் எல்லாம் கண்ணீர் சிந்திடவே
உம் சிதைக்கு தீமூட்ட முடியாமல் தனைமறந்து ஈழமண்னை எண்ணி
செந்நீரினில் கரைந்து ஈழமண்ணே வறண்டு நிற்கும் பாலை நிலமாய் தாய்மண்ணிருக்க
இறுதி ஊர்வலப் பாதையிலும் கூடி நின்று சுதந்திரவாசமின்றி அடிமையின் விலங்குகளுக்குள்
அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் அதிகாரவர்க்கத்தின் ஆணவத்தின் பேய்தாண்டவமாடும் சுடுகாடாய் மாறிவிட்ட ஈழமண்ணின் இழி நிலையை எண்ணி மனங்குமுறி கண்கள் சிவப்பேறியே!உரிமை இழந்து வாழ்வாதாரமிழந்து நாடிழந்து வீடிழந்து சொந்தம் சுற்றமிழந்து
அடக்கப்பட்டு உணர்வுகள் இழந்த நிலையில் கம்பிவேலிக்குள் விலங்குகள் அணிந்த விலங்குகளிலும் இழிந்த உயிரற்ற உடலாகவே சொந்த வீடில்லாத அந்த தூர்ந்துபோன
வீட்டிற்குள் இருந்து கேவி அழும் நிலை எங்களுக்கும் வந்ததே அது
உங்களுக்கும் தானா? என்று விம்மும் நெஞ்சுடன்
விடை தருகிறோம் அம்மா
சென்று வாருங்கள் தாயே! சென்று வாருங்கள் தாயே!
மீண்டும் இம்மண்ணில் கோடிக் கோடி பிரபாகரன்களை உருவாக்கும் வாழும் எங்கள் ஈழமண்ணின் தமிழ்த்தாய்க்குலங்களே!!

பார்வதி அம்மா பார்வதி அம்மா
நீங்கள் பிரபாகரனின் தாய்மட்டுமல்ல
எங்களின் தமிழீழத் தாயே
எங்களின் தமிழீழத் தாயே!













No comments: