திருவிழா அல்ல தெரு உலா இது தேர்தல் உலா
தலைவன் உலாவிற்குப் பதிலாக இது போலி அரசியல் தலைவர்கள் உலா மக்கள் அனைவரும்
தலைவியாய் தலைவனை இங்கு காதலோடு பார்க்கவில்லை
காசோடுவரும் கயவர்களை எதிர்பார்க்கும் நயவஞ்சக தேசமிது!!
காசுக்கு வாக்கினை விற்கும் அடிமைகளின் கூடாரமிது!
கவர்களில் காசையும் இலவசங்களையும் எதிர் நோக்கும் அசிங்கமான தேசமிது!-தேர்தல் அன்று
ஒரு நாள் காலில் விழுந்து-வரும் ஐந்து வருடமும் மக்கள் அனைவரையும்
காலைவாரிவிடும் காட்சிகள் இங்கு அரங்கேறிடும்!
நல்லோரை இனங்கண்டு மக்கள் வாக்களித்தால்; பிழைத்திடுவார்கள்!
No comments:
Post a Comment