காதலியே தேன்மொழியே!- நீயும்
கண்ணைக் கட்டி ஆடவந்தாய்- அமுதக்
கண்ணாலே கவிதை தந்தாய்!-காணாதது போலவே நீயும்
கண்ணாமூச்சி ஆடவந்தாய்!-காதலியே உனை நான்
கண்ணாலே கண்டுபிடிப்பேன் -அன்பாலே
கட்டியணைப்பேன்
நெஞ்சாலே அரவணைப்பேன்! ஓடிவா! உள்ளத்து எழுந்த இன்பவரிகளை
தேனிதழ் திறந்து நீயும் வாழ்வினில் பேரின்பமாகவே!
தெம்மாங்குதேன் பாடிவா!
பக்கம் வந்தால் தோழியே உன்னை
பாய்ந்து பிடிப்பேன் ஓடிவா!
கையைத் தட்டி ஓடிவா!-உன்
கொலுசு சத்தம் கேட்கவே
குமரிப் பெண்ணே
கூடிச் சேர்ந்து ஓடிவா!-அறிவாலே உனையே
பற்றிப் பிடிப்பேன் ஓடிவா!- நேச உறவே நீயும்
பக்கம் நெருங்கி ஓடிவா!
No comments:
Post a Comment