Popular Posts

Monday, February 28, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தாலாட்டு/அன்பு/-”இல்லாமை இல்லாத வீட்டை உருவாக்கும்”

அம்மா எனக்கு வேணுமே-அன்பாலே
ஆசைமுத்தம் தரணுமே!-என்னையே
உச்சி முகந்து ஆசையாய்-தினமும்
உவந்து அணைத்து கொள்ளவே
அம்மா எனக்கு வேணுமே-அன்பாலே
ஆசைமுத்தம் தரணுமே!


அழுத கண்ணீர் துடைக்கவே-தாய்
அழுதால் என்னைக் கொஞ்சவே!-காலை மாலை
பூவும் பொட்டும் எனக்கிட்டு-தங்கமாய்
பூப்போல் என்னைக் கொஞ்சவே!
அம்மா எனக்கு வேணுமே-அன்பாலே
ஆசைமுத்தம் தரணுமே!

பள்ளி செல்லும் போதிலே!-சிரித்து
பையைத் தோளில் மாட்டவே!- நானும்
பள்ளி முடிந்து வருகையில்-கனிவாக
பார்த்து வாசல் நிற்கவே!
அம்மா எனக்கு வேணுமே-அன்பாலே
ஆசைமுத்தம் தரணுமே!
இல்லாமை
இல்லாத வீட்டை உருவாக்கும்
திரு நாட்டை உருவாக்கும்
என் தாயின் மணிமொழி
எனக்கு வேதமந்திரமாகணுமே!

அம்மா எனக்கு வேணுமே-அன்பாலே
ஆசைமுத்தம் தரணுமே!-என்னையே
உச்சி முகந்து ஆசையாய்-தினமும்
உவந்து அணைத்து கொள்ளவே
அம்மா எனக்கு வேணுமே-அன்பாலே
ஆசைமுத்தம் தரணுமே!

Sunday, February 13, 2011

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்/-’காதலர்தினத்து காதலர்களே எது காதலுங்க?

கண்ணுலதான் பார்த்தவுடனே பல்ப் எரிஞ்சா அது பர்ஸ்ட் லவ்வுங்க!
கண்ணெதிரே பார்க்காமத்தான் போனா அது வேர்ஸ்ட் லவ்வுங்க!
கண்டும் காணாமத்தான் போனால் அது லேட் லவ்வுங்க!
கண்டுகண்டு ரசித்துத்தான் வருவது ரொமான்ஸ் லவ்வுங்க!-ஒன்சைடா
காலமெல்லாம் சுற்றினாலும் கைவராது டெஸர்ட் லவ்வுங்க!

கண்கள் நான்கும் ஒருசேர வருவது கன்பார்ம் லவ்வுங்க!
கண்ணைக் கட்டி காட்டுல விடுவது போர் லவ்வுங்க!
காதலிய ஏடிஎம்மா மாற்றி காசைகறப்பது சீட்டிங்க் லவ்வுங்க!
காதலன பாடிகார்டா சுற்றவிட்டு போவது யூஸ்லெஸ் லவ்வுங்க!-சில
காதலனுக டைம்பாஸ் பண்றதுக்கு செய்யுறது பார்ட்டைம் லவ்வுங்க!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்/-’
காதலியின் பிறந்த நாளுக்கும் காதலன் பிறந்த நாளுக்கும் கிப்ட்
வாங்கித் தருவது என்னவோ காதலன் மணிபர்ஸ் கிழியும் லவ்வுங்க!
வீட்டுல அவசரப்படுத்தி காதலிக்கு காத்திருக்கும் வெயிட்டிங்க் லவ்வுங்க!
காதலிய காக்கவெச்சா பாவமுனு சொல்லும் பூஸ்ட் லவ்வுங்க!
காதலர் மனதுக்குள்ள பயர்தெரிக்கும் ப்ர்ஸ்ட் லவ்வுங்க!
காதலுல அழகபார்க்காது யோசிச்சு முடிவெடுப்பது அது பெஸ்ட் லவ்வுங்க!
காதல தியேட்டர் இருட்டிலும் பூங்கா புதரிலும் தேடுவது
காலமெல்லாம் நினைவுல ஓடுவது அன்மெர்ச்சூர் லவ்வுங்க!
காதலா நட்பானு முடிவெடுக்கும் முன்னே ஆறு செமஸ்டரும் போய்விடும் லவ்வுங்க!
காதலனின் நண்பனின் பைக்குல சுற்றுசுற்றுனு சுற்றினாலுமே!
காதலியின் மனசுதனை புரியாத புதிரான லவ்வுங்க!
காதலனும் காதலியும் மனசுவிட்டு பேசி முடிவெடுப்பது
காலமெல்லாம் கூடவரும் மெய்யான ட்ரூ லவ்வுங்க!




தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்/0’காதலர் தினமே !எது காதல்?

காதலர் தினமே எது காதல்?
காதல் நேர்மையின் இலக்கணமானால் கரைசேரும்!
காமத்தின் வசப்பட்டால் காதல்தளிர் பட்டுப்போகும்!
காதல்மதம் சாதி,மொழி,இன,பிரபஞ்சத்தை கடந்ததல்லவா?-எதிர்க்கும்
மனிதர்களையும் எதையும் அலட்சியம் செய்துவிட்டு-உண்மைக்காதல்
மனதைமட்டும் தேடுகின்ற ஒப்பற்ற புனிதமானது காதலலல்லவா?

காதலின்போது ஆயுதம் தூங்கினால் பரவாயில்லையே
காதலன்புக்கு அறிவுதூங்கிவிட்டால் காதலாகாது!
காதல் மனதினைவருடும் இளந்தென்றலாகுமே!-அங்கே
காமம் என்ற வன்முறைக்கு ஒருபோதும் இடமில்லையே!
காமத்திற்கு தலையசைத்தால் அதுகாதல் ஆவதில்லையே!
கண்கள் பேசியதும் கட்டியணைப்பது காதலல்லவே!
கல்யாணம் வரையினில் பொறுமை காப்பது மெய்யான காதலாகுமே!

காதல் என்பது இயற்கையான ஒருஇன்ப நிகழ்வு ஆகுமே!
காதலர்தினம் என்பது காலங்காலமாய் வந்த மரபுதானே!
காதலர்கள் திருமணத்திற்குப்பின் கொண்டாடுவதும்
காதலர் தினத்திற்கு ஒருபுத்துணர்ச்சி கொடுத்திடுமே!
காதலர்தினத்தில் பொதுஇடத்தில் கட்டிப்பிடித்து இருப்பது
கலாச்சார சீரழிவுக்கு கொண்டுசெல்லும் அவலம் அல்லவா?

காதலினை தேர்ந்தெடுத்து காதலிக்கவேணும்
காதலித்த பின்னே காலமெல்லாம் சண்டையிடக் கூடாதே!
காதலித்த போது இனிக்க இனிக்க பேசியதே
காதலுக்குப் பின்னும் சந்தோசம் தொடருனுமே!

காதலிலே நிதானமாகவே யோசித்து காதலர்கள்
காதலன்,காதலியை தேர்ந்தெடுப்பது அவசியமாகுமே!
காதலென்பது வீட்டைவிட்டு ஓடிபோவது அல்லவே
காதலென்பது வீட்டிலிருந்து போராடிச் ஜெயிப்பதாகுமே!
காதலின்வெற்றி பிரச்னைகளை தோல்வியடைய வைப்பதாகுமே!
காதலர்காட்டும் அன்பினை ஒருபோதும் எல்லைமீறிவிடக் கூடாது!
காதலர்களுக்குள் தாய்,தந்தைபோல் பாசத்தை காட்டிடவேண்டும்!-எல்லை தாண்டிய
காதலுக்கு வாழும் சமூகத்தில் என்றும் தோல்விதானே!~
காதலுக்காக கல்வியை கோட்டைவிட்டால் காதல் ஜெயிக்காதே!
காதலிலே எல்லைமீறி தற்கொலை என்பது கோழைத்தனம் ஆகிடுமே!0மாணவப் பருவத்துக்
காதலென்பது சமூகத்தில் உண்மைக் காதல் ஆகாதே!
எது காதல்?

Saturday, February 12, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்-/-எதிலும் சரிபாதி எதிலும் சரிபாதி

எதிலும் சரிபாதி எதிலும் சரிபாதி
இருள்பாதி ஒளிபாதி
ஆண்பாதி பெண்பாதி-காதலிலே
கண்பாதி இதழ்பாதி பேசிடுமே!

நன்மைபாதி தீமை பாதி
துன்பம்பாதி இன்பம்பாதி-வாழ்வினிலே
முதல்பாதி இளமை மறுபாதி முதுமை
பாதி நாள் விழிப்பு மீதி நாள் தூக்கம்
தூக்கம்பாதி ஏக்கம்பாதி
துயரம்பாதி சந்தோசம் பாதி-உலகமெல்லாம்
வரவுபாதி செலவுபாதி
உறவுபாதி பகையும் பாதி
உண்மைபாதி பொய்மைபாதி

எதிலும் சரிபாதி எதிலும் சரிபாதி
எதிலும் சரிபாதி எதிலும் சரிபாதி

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்-/-’மக்கள் ஜன நாயகமும் நானடா!

பசிக்கும் அழுதது நானடா
வலிக்கும் முனகியதும் நானடா!
காதலுக்கும் ஏங்கியதும் நானடா!
உணர்வினில் துடித்ததும் நானடா!
உண்மைக்கு போராடியதும் நானடா!
பொருளுக்கு தவித்ததும் நானடா!
புரட்சிக்கு சீறியதும் நானடா!
புதுமைக்கு விழித்ததும் நானடா!
பழமையை படித்ததும் நானடா!
மனிதத்தை வாழவைக்க செயல்படும்
மக்கள் ஜன நாயகமும் நானடா!
மனித நேயத்தை காப்பதும் நானடா!
மெய்யான சுதந்திரம் வேண்டுவதும் நானடா!










தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்-/-’ உடலின் யாகம் அல்லவா?

அன்று நீதந்த முத்தத்திற்கே - நானே
இன்றைய நிகழ்காலத்தை களவாடக் கொடுத்து நின்றேனே!
நேற்றைய ஸ்பரிசங்களிலே! என் மனதே
சாய்ந்திருக்கின்றதே!
உன்முத்தமே!
காற்றுவீசும் போதெல்லாம் கிளைகள் உரசி பற்றி எரிகின்ற
காட்டுத் தீயல்லவா?
அது என்றும் நினைக்கும் ஞாபகக் காற்றின் உடலின் யாகம் அல்லவா?










தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்-/-’அமைதியோ ஆழ்கடலின் கீழே!

ஆசையோ மலையின் உச்சி
அமைதியோ ஆழ்கடலின் கீழே!
ஆழ்கடலின் அடியினில் போனவனே!-கையினில்
எடுத்துவந்தான் ஆணிமுத்துக்களையே!
பேராசையாலே!
மலையின் உச்சிபோனவனே!
அதல பாதாளத்தில்
வீழ்ந்து போனானே!










தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்-/-’நட்பாகவே விடிவெள்ளியே!

இருளின் இசையே ! பனியினில் நனைகின்றதே!
தென்னோலை ஓரமே!
ஒளியினைத் தடவிடும் சந்திர உதயமே!
பார்த்து பார்த்து யுகயுகமாய் பேசிடவே!-
பூத்துக் குலுங்கிடும் ஆகாய தோட்டமே!- விண்
மீன்களின் கண்சிமிட்டல்களிலே!
தொன்றிடும் எண்ண எண்ண ரகசியங்களோ?
காலந்தோறும் மனதிலென்ன? தாகங்களோ?-அலையும்
மேகம் வரும்பொழுதுக்கே வெள்ளிமீனின்
மவுனமான தவமென்னவோ?

பஞ் சாரக் கூடைக்குள்ளே
கூவுகின்ற சேவலுக்கும்
செம்பஞ்சுக் குழம்பாகவே
சேதிசொல்லும் கீழ்வானுக்கே!
இடைவெளியில் தோன்றுதடி
நட்பாகவே விடிவெள்ளியே!

Monday, February 7, 2011

தமிழ்பாலா=/காதல்/கவிதை/தத்துவம்/-:மாவோயிஸ்டுகள் உணர மறுக்கின்றனர். :

புரட்சியின் கட்டங்களை தெளிவாக வரையறுக்காத எந்த புரட்சியும் பெரும் ஆபத்தையும், கேடுகளையும் விளைவிக்கும்.
அனைத்து முற்போக்கு சந்திகளையும் ஒன்றிணைத்து மக்கள் ஜனநாயக புரட்சியை முழுமைபடுத்தி அடுத்த கட்டமாக சோஷலிசத்திற்கு மாறிச்செல்ல வேண்டும்.
மார்க்சிஸ்ட் கட்சி அனைவருக்கும் வாக்குரிமை மற்றும் பாராளுமன்றத்தையும் சட்டமன்றத்தையும் உழைப்பாளி மக்களின் ஜனநாயக போராட்டத்திற்கு ஒரு கருவியாகவும், அவர்களது நலன்களை பாதுகாக்கவும் பயன்படுத்திட வேண்டும் என்றும் மதிப்பிட்டு செயல்படுகிறது. முதலாளித்துவ வர்க்க ஆட்சியில் பாராளுமன்ற முறையில் மக்களின் உரிமைகளை பாதுகாக்க அது பயன்படுகிறது. இன்றைக்கும் பாராளுமன்றத்திற்கு சுரண்டும் வர்க்கத்திட மிருந்துதான் ஆபத்து வருகிறது என்பதை மாவோயிஸ்டுகள் உணர மறுக்கின்றனர்.

நன்றி மார்க்ஸிஸ்ட் இதழ்

Sunday, February 6, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”உன்னொரு பார்வையினாலே!

முள்ளும் முல்லையாகும் உன்னொரு பார்வையினாலே!
கல்லும் கலையாகும் கண்ணே உன் நேசத்தாலே!
மண்ணும் மணமாகும் உன்காதல் மொழியினாலே!
மனமும் ஒளிவீசும் உன்னுயிரின் கலப்பினாலே!

Saturday, February 5, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”மெய்யான ட்ரூ லவ்வுங்க!

கண்ணுலதான் பார்த்தவுடனே பல்ப் எரிஞ்சா அது பர்ஸ்ட் லவ்வுங்க!
கண்ணெதிரே பார்க்காமத்தான் போனா அது வேர்ஸ்ட் லவ்வுங்க!
கண்டும் காணாமத்தான் போனால் அது லேட் லவ்வுங்க!
கண்டுகண்டு ரசித்துத்தான் வருவது ரொமான்ஸ் லவ்வுங்க!-ஒன்சைடா
காலமெல்லாம் சுற்றினாலும் கைவராது டெஸர்ட் லவ்வுங்க!

கண்கள் நான்கும் ஒருசேர வருவது கன்பார்ம் லவ்வுங்க!
கண்ணைக் கட்டி காட்டுல விடுவது போர் லவ்வுங்க!
காதலிய ஏடிஎம்மா மாற்றி காசைகறப்பது சீட்டிங்க் லவ்வுங்க!
காதலன பாடிகார்டா சுற்றவிட்டு போவது யூஸ்லெஸ் லவ்வுங்க!-சில
காதலனுக டைம்பாஸ் பண்றதுக்கு செய்யுறது பார்ட்டைம் லவ்வுங்க!
காதலியின் பிறந்த நாளுக்கும் காதலன் பிறந்த நாளுக்கும் கிப்ட்
வாங்கித் தருவது என்னவோ காதலன் மணிபர்ஸ் கிழியும் லவ்வுங்க!
வீட்டுல அவசரப்படுத்தி காதலிக்கு காத்திருக்கும் வெயிட்டிங்க் லவ்வுங்க!
காதலிய காக்கவெச்சா பாவமுனு சொல்லும் பூஸ்ட் லவ்வுங்க!
காதலர் மனதுக்குள்ள பயர்தெரிக்கும் ப்ர்ஸ்ட் லவ்வுங்க!
காதலுல அழகபார்க்காது யோசிச்சு முடிவெடுப்பது அது பெஸ்ட் லவ்வுங்க!
காதல தியேட்டர் இருட்டிலும் பூங்கா புதரிலும் தேடுவது
காலமெல்லாம் நினைவுல ஓடுவது அன்மெர்ச்சூர் லவ்வுங்க!
காதலா நட்பானு முடிவெடுக்கும் முன்னே ஆறு செமஸ்டரும் போய்விடும் லவ்வுங்க!
காதலனின் நண்பனின் பைக்குல சுற்றுசுற்றுனு சுற்றினாலுமே!
காதலியின் மனசுதனை புரியாத புதிரான லவ்வுங்க!
காதலனும் காதலியும் மனசுவிட்டு பேசி முடிவெடுப்பது
காலமெல்லாம் கூடவரும் மெய்யான ட்ரூ லவ்வுங்க!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”மனிதர்க்கு அன்பு இனிமையாகுமே!

இனிமையாகுமே இனிமையாகுமே!
பூவுக்கு நறுமணம் இனிமையாகுமே!
இனிமையாகுமே இனிமையாகுமே!
இனிமையாகுமே இனிமையாகுமே!
பாட்டிற்குச் சந்தம் இனிமையாகுமே!
இனிமையாகுமே இனிமையாகுமே!
பாருக்கு வசந்தம் இனிமையாகுமே!
இனிமையாகுமே இனிமையாகுமே!
குயிலுக்கு இன்குரல் இனிமையாகுமே!
இனிமையாகுமே இனிமையாகுமே!
மனிதர்க்கு அன்பு இனிமையாகுமே!







பூவைக்கு திருமணம் இனிமையாகுமே!
இனிமையாகுமே இனிமையாகுமே
நாவிற்கு தேன் தமிழ் இனிமையாகுமே

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”!உயிர் மூச்சுக் காற்றும் அதுவாகுமடா!

உலகின் உயிரே காற்றாகுமடா!
உலவும் தென்றலும் காற்றாகுமடா!-அதுவே
இனிமை குலவும் இசையாகுமடா!-மேலும் மக்கள்
பேசுகின்ற தேன் தமிழ் மொழியாகுமடா!-
புல்லாங்குழலின் தேனிசை ஆகுமடா!உயிர்
மூச்சுக் காற்றும் அதுவாகுமடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”பிரபஞ்ச எல்லைக்கும் நாம்போய் இன்பத்தில்!

இனி தனிமையில்லை இனிமைக்கும் பஞ்சமில்லை
இனி வாழ் நாளெல்லாம் தேன்சிந்தும் தெம்மாங்குதான்!

கொட்டட்டும் கொட்டட்டும் வானம்
குளிரட்டும் குளிரட்டும் மேனி
கட்டட்டும் கட்டட்டும் கைகளே-காதல்
கரைசேரட்டும் சேரட்டும் அன்பினிலே!
இனி தனிமையில்லை இனிமைக்கும் பஞ்சமில்லை
இனி வாழ் நாளெல்லாம் தேன்சிந்தும் தெம்மாங்குதான்!

வானவில்லை கையினில் எடுத்து அம்பினையே தொடுத்திடவா?
ஆழ்கடலினையே சுருட்டி எடுத்து உன்னை குளித்திட வைத்திடவா?
எந்த பிரபஞ்ச எல்லைக்கும் நாம்போய் இன்பத்தில் திளைத்திடுவோமா?
அந்த பிரமனும் இருந்தால் அவனையும் நண்பனாக்கிக் கொண்டிடுவோமா?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”பூக்கள் பாடவந்தது பூபாளமே!

புதுமைதனை நாடுகின்ற நெஞ்சங்களுக்கு
பூக்கள் பாடவந்தது பூபாளமே!
வந்த மனம் கிறுகிறுக்கு தடி!
வசந்தமுகம் ஒளிசுரக்குதடி!-அன்புக்
காதலே !இன்ப நேசமே!
பூவிடை ஊறிய தேனாகுமே!
பொன்னிடை ஏறிய சுடராகுமே!
மாவிடை மாறிய சுவையாகுமே!
நாவிடை பாடிடும் இசையாகுமே!

எண்ணே எழுத்தே இன்பத்தமிழே!
பண்ணே பாவே பைந்தமிழே!
பணிவுடன் உந்தன் தாள் வணங்குகின்றேனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”நதிகளென்றோ? தேசவுடைமையோ?

மூன்றில் இரண்டுபங்கு நீரே இந்த உலகினில் மட்டுமல்ல~!
வாழும் மானிடரின் உடலிலும் நீருண்டு!
ஆயுள்கூடி வாழவே அதிகம் தண்ணீர் அருந்திடுவோம்!
அந்த தண்ணீரையும் அடைத்து காசுக்கு விற்கும் நிலையாச்சுதே!
இயற்கையில் பாயும் நதி நீருக்கும் பஞ்சம் வந்துவிட்டதே!
அந்த நதியையும் பிரித்துவைத்து பேதம் பார்த்தாச்சே!@
இந்த நதிகளையே என்றுதான் உண்மை தேசவுடைமை ஆக்கிவிடுவோமோ?
நதிகளென்றோ? தேசவுடைமையோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”கலப்படத்தை தடுத்திடவே விரைந்திடுவோம்!

கலப்படத்தை தடுத்திடவே விரைந்திடுவோம்!
கண்ணான நன்னாளை உருவாக்கிடுவோம்!

கலப்படமாம் கலப்படமாம் இந்த உலகினிலே!வாழும் மக்களின்
கனிவான வாழ்க்க்கைக்குத் தான் உலை வைத்திடும் வாழ் நாளிலே!
பாலிலே கலப்படமே வயிற்றுப் போக்காக்கிடுமே!
தேயிலையில் கலப்படமே புற்று நோய் உருவாக்கிடுமே!
கடலை,துவரைப் பருப்பினிலே கேசரிப் பருப்பினைக் கலந்தே
கடைதனில் விற்கின்றார் அதுமனிதர்க்கு கீல்வாதம் உண்டாக்கிடுமே!
மஞ்சள் தூளினில் கலப்படமே ரத்தசோகைதனை கொடுத்திடுமே!~
பசியின்றி புற்று நோய் தாக்கிடவே உடலில் இடம் கொடுத்திடுமே!
இனிக்கின்ற மிட்டாயும் இரசாயண பானங்களும்
மனிதர்க்கு கல்லீரலைத் தாக்குகின்ற நோயாக்கிடுமே!
கள்ள சாராயம் காய்ச்சிடுவார் சமூகவிரோதிகளே-அவரே
நோய்தீர்க்கும் மருந்தினிலும் கலப்படம் செய்திடுவாரே
நாளான மருந்தினையே காசாக்குகின்ற நயவஞ்சகரையே
தூக்கிலிடும் சட்டங்கள் இன்னாட்டினில் வரவேண்டுமெ!

காப்பிதனில் புளியங்கொட்டை உளுந்தின் தூள் கலந்திடுவார்
காதகரின் இழிசெயலாலே வயிற்றுக்கோளாறே உண்டாகிவிடுமே!
கலப்படத்தை தடுத்திடவே விரைந்திடுவோம்
கண்ணான நன்னாளை உருவாக்கிடுவோம்