Sunday, March 27, 2011
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/-! ”மக்களே !இலவசம் என்ற பெயரில் வாங்காதீர்கள் லஞ்சம்! வாக்களிக்குமுன் சிந்தியுங்கள் கொஞ்சம்~!
வாக்களிக்குமுன் சிந்தியுங்கள் கொஞ்சம்~!= நல்ல
வேட்பாளர்க்கே வந்ததடா பஞ்சம்!உள்ளம்
பதைக்குதடா நெஞ்சம்!
இலவசம் என்பது நமைஏய்த்திடும் வஞ்சம்~!
இலவசமாய்!
எங்களுக்குத் தேவை மிக்சியும் கிரைண்டரும் அல்ல!
அதை இயக்கத் தேவையான தடையில்லா மின்சாரமே!
வேலையில்லாத இளைஞர்க்கு வேலைவாய்ப்புத் தேவையே!
கல்விகற்கும் மாணவர்க்கு கட்டணகொள்ளை இருந்து விடுதலை தேவையே!
அந்தந்த மாவட்டம் சார்ந்த தொழில்கள் விவசாயத்தை மேம்படுத்தும்
அம்சமான தொலை நோக்குப் பார்வையோடு கூடிய திட்டங்கள்
இந்த தேர்தல் வாக்குறுதிகளில் துளிகூட இல்லையன்றோ!
காரணம் நாம்தான் வாக்காளர்கள்தான் என்றால் மிகையாகாது!
நம்மலில் சிலவாக்காளர்கள்தான் குவார்ட்டர்,கோழிபிரியாணி
வீடுதோறும் வேட்டிசேலை ,மூக்குத்தி,காசுக்கும் வாக்களிக்க
நாடெல்லாம் பழகிவிட்டோமே!எதைக் கொடுத்தால்
வாக்காளர்களெல்லாம் மயங்குவார்கள் என்று இந்த முதலாளித்துவ
காசுக்கு விலைபேசும் கட்சிகளுக்கு என்ன தெரியாதா?
தேர்தலில் நிற்கும் பெரும்பாலான வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்
அடிதடி ,ஆள்கடத்தல்,கொலை,கொள்ளையில் குற்றங்களுக்காக
அடிக்கடி சிறைசென்ற தனக்காகவே உழைக்கும் தறுதலைகள்!
அதைஅறிந்தும் அவர்க்கே வாக்குகேட்டு வாக்களிக்க வற்புறுத்தும் அவலம்தான் என்ன?
இனிசாமான்யர்கள் தேர்தலில் நின்று வெல்லுவது என்பது எட்டாக்கனிதான்!
கோடிசெலவு செய்யும் பணக்காரர்கள் களத்தில் இறங்கிவிட்டாரே!-மக்கள்
சேவைசெய்ய எதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்திடவேண்டும்?
இந்தகேள்விதனை மறைப்பதற்கே இத்தனை இலவசங்கள்! இத்யாதிகளே!
இந்த மடமைதனைக் கொழுத்த எத்தனைபாரதிகள் எழப்போகின்றார்களோ?
தொகுதிமக்கள் குறைதனை அறியாத தன்னல வேட்பாளர்கள்
தொகுதி மக்கள் தொகை அறியாத கோடீஸ்வர வேட்பாளர்கள்
இலவசங்களால் ஆட்சி கட்டிலேறி மக்கள் நலன்பற்றி அறியாமலே
ஐந்தாண்டுகளும் ஓடிபோனவுடன் மீண்டும் வாக்குகேட்டு நிற்பார்கள்!
நாமும் அந்த இலவச போதைதெளிவதற்குள் வாக்குபோட தயாராகி நிற்போம்!
மக்களே !இலவசம் என்ற பெயரில் வாங்காதீர்கள் லஞ்சம்!
வாக்களிக்குமுன் சிந்தியுங்கள் கொஞ்சம்~!= நல்ல
வேட்பாளர்க்கே வந்ததடா பஞ்சம்!உள்ளம்
பதைக்குதடா நெஞ்சம்!
இலவசம் என்பது நமைஏய்த்திடும் வஞ்சம்~!
தைரியம் இருந்தால் விலைவாசியை ஒருகட்டுக்குள் வைக்கச் சொல்லுங்கள்!!
வீட்டுவரிதனை ஏற்றாமல் இருக்கச் சொல்லுங்கள்!இல்லை
எல்லாவரிகளையும் ரத்துசெய்ய சொல்லுங்கள் பார்ப்போம்!
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/-”
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/-” பார்வதி அம்மா பார்வதி அம்மா நீங்கள் பிரபாகரனின் தாய்மட்டுமல்ல எங்களின் தமிழீழத் தாயே !
நீங்கள் பிரபாகரனின் தாய்மட்டுமல்ல
எங்களின் தமிழீழத் தாயே
எங்களின் தமிழீழத் தாயே!
!-இனி
உங்களை தரிசிப்பது எப்போதம்மா!-ஈழத்
தேசியத் தலைவனின் தாய் என்ற
அன்புவிளக்கே அணைந்து விட்டாயம்மா!
ஈழதேசம் மட்டுமல்ல தமிழ்பேசும் தேசமக்கள்
உங்களைப் பிரிந்த எங்கள் இதயத்திலெல்லாமே?
இந்தபிரிவு ஆறாத காயமே
இந்த உலகம் முழுவதும் தாயே
சோகத்துள் மூழ்கிக் கிடக்கின்றதே
இனி நீங்கள் விட்டுச்சென்ற வீரப்பயணத்தை ஈழமண்ணில் நாங்கள் தொடர்ந்திடுவோம் தாயே!
சென்று வாருங்கள் தாயே! சென்று வாருங்கள்!!தாயே இன்னும் வீரத்தாய் பரம்பரையை உருவாக்கிடுவோம் தாயே!கோடிக் கோடியாகவே!
எண்ணிலடங்காத பிரபாகரன்களையே போராளியாகவே நிமிர்ந்திடச் செய்திடுவோம் தாயே!
இன்று சோகம் படர்ந்திருக்கும்
எங்களுக்கோர் இருண்ட நாள் என்றபோதிலுமே எங்களின் மீள்போரினிலே உங்கள்
அடிச்சுவட்டினிலே மீண்டும் ஈழமண்ணில் ஈழத்தமிழரின் புதிய வெளிச்சத்தை கண்டிடுவோம் தாயே!
முள்ளிவாய்க்கால் முற்றுக்கைக்குள் சிக்கி
கொடியோரின் கோட்டைக்குள் சிக்கி சிறையிருந்தீரே எங்கள் தாயே!
நீங்கள் சிந்திய ரத்தம் ஈரம் இன்னும் ஆறவில்லையே எங்கள் தாயே!
மீண்டும் நீங்கள் ஈழ சுதந்திர மண்ணில் பிறப்பெடுத்திடுவீரே எங்கள் தாயே!
எரிக்கும் நெருப்பும் உங்களைச் சுட்டுவிடாது தாயே!
சென்று வாருங்கள் தாயே! சென்று வாருங்கள் தாயே!!!
தமிழீழத்தில் வீரத்தை விதைத்து வைத்தவரே!எங்கள் தாயே!
சரித்திரம் தாங்கும் வீரனைப் பெற்றுத் தந்தவரே!எங்கள் தாயே!
விடுதலையின் போராளியே ஈழமண்ணின் தாயே!எங்கள் தாயே!
சென்று வாருங்கள் தாயே! சென்று வாருங்கள் தாயே!!!
தூக்கி அணைத்த ஈழப்பிள்ளைகள் எல்லாம் கண்ணீர் சிந்திடவே
உம் சிதைக்கு தீமூட்ட முடியாமல் தனைமறந்து ஈழமண்னை எண்ணி
செந்நீரினில் கரைந்து ஈழமண்ணே வறண்டு நிற்கும் பாலை நிலமாய் தாய்மண்ணிருக்க
இறுதி ஊர்வலப் பாதையிலும் கூடி நின்று சுதந்திரவாசமின்றி அடிமையின் விலங்குகளுக்குள்
அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் அதிகாரவர்க்கத்தின் ஆணவத்தின் பேய்தாண்டவமாடும் சுடுகாடாய் மாறிவிட்ட ஈழமண்ணின் இழி நிலையை எண்ணி மனங்குமுறி கண்கள் சிவப்பேறியே!உரிமை இழந்து வாழ்வாதாரமிழந்து நாடிழந்து வீடிழந்து சொந்தம் சுற்றமிழந்து
அடக்கப்பட்டு உணர்வுகள் இழந்த நிலையில் கம்பிவேலிக்குள் விலங்குகள் அணிந்த விலங்குகளிலும் இழிந்த உயிரற்ற உடலாகவே சொந்த வீடில்லாத அந்த தூர்ந்துபோன
வீட்டிற்குள் இருந்து கேவி அழும் நிலை எங்களுக்கும் வந்ததே அது
உங்களுக்கும் தானா? என்று விம்மும் நெஞ்சுடன்
விடை தருகிறோம் அம்மா
சென்று வாருங்கள் தாயே! சென்று வாருங்கள் தாயே!
மீண்டும் இம்மண்ணில் கோடிக் கோடி பிரபாகரன்களை உருவாக்கும் வாழும் எங்கள் ஈழமண்ணின் தமிழ்த்தாய்க்குலங்களே!!
பார்வதி அம்மா பார்வதி அம்மா
நீங்கள் பிரபாகரனின் தாய்மட்டுமல்ல
எங்களின் தமிழீழத் தாயே
எங்களின் தமிழீழத் தாயே!
”
Tuesday, March 22, 2011
Sunday, March 20, 2011
தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / அனுபவம்காதலியே கனிமொழியே கண்மணியே மணிமொழியே! /-
புரியவில்லை...ஒன்றும்
தெரியவில்லை -யாதும் நானே
மெள்னமாய் இருப்பவளே காதலியே செங்கரும்பே!
நம் காதலுக்கு
மெளனத்தையே பதிலாய்
தந்து கொண்டிருக்கிறாயே என் துணையென்று நானெண்ணி ஏங்கிதவிக்கும்
புரியவில்லை...ஒன்றும்
தெரியவில்லை -யாதும் நானே
தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / குழந்தைப்பாடல் காதல் தீபமேற்றும் நேச ஒளியானதோ?/-
காதலியே!
வானம் உன் அகண்ட மேனியானதோ?
தேன்மொழியே!
விண்மீன்கள்
கண்சாடை காட்டி நின்று
என் -
உன் கனவுகளின்
கண்சிமிட்டல்களானதோ?
கண்மணியே!
நிலவே
உன் நெற்றியிலே வைத்த திலகமானதோ?
தென்றல் காற்றே
நம் காதலுக்கு துணை நிற்கும்
இதமான தாலாட்டானதோ?
மழையே
உன் கண்களின் அன்பு ரசம் சொட்டும்
பேரின்பமானதோ?
ஆதவனே
நம் கண்களில் காதல் தீபமேற்றும் நேச ஒளியானதோ?
தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / குழந்தைப்பாடல்நல்லோரை இனங்கண்டு மக்கள் வாக்களித்தால்; பிழைத்திடுவார்கள்! /-
திருவிழா அல்ல தெரு உலா இது தேர்தல் உலா
தலைவன் உலாவிற்குப் பதிலாக இது போலி அரசியல் தலைவர்கள் உலா மக்கள் அனைவரும்
தலைவியாய் தலைவனை இங்கு காதலோடு பார்க்கவில்லை
காசோடுவரும் கயவர்களை எதிர்பார்க்கும் நயவஞ்சக தேசமிது!!
காசுக்கு வாக்கினை விற்கும் அடிமைகளின் கூடாரமிது!
கவர்களில் காசையும் இலவசங்களையும் எதிர் நோக்கும் அசிங்கமான தேசமிது!-தேர்தல் அன்று
ஒரு நாள் காலில் விழுந்து-வரும் ஐந்து வருடமும் மக்கள் அனைவரையும்
காலைவாரிவிடும் காட்சிகள் இங்கு அரங்கேறிடும்!
நல்லோரை இனங்கண்டு மக்கள் வாக்களித்தால்; பிழைத்திடுவார்கள்!
தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / குழந்தைப்பாடல்/தான் தானே தந்தோமென்று!-
தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / குழந்தைப்பாடல்/காதலராம் நாம் சிந்தித்துப் பார்க்கையிலே !-
தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / குழந்தைப்பாடல்/-”/பாப்பா பாப்பா சின்ன சின்ன பாப்பா!
தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / அனுபவம்/சிவப்பே சிவப்பே தியாகமடா!
தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / அனுபவம்/-கண்ணைக் கட்டி ஆடவந்தாய்!”
Thursday, March 3, 2011
தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்/-:தாய் நாட்டின் சொத்தெல்லாம் அதன்சேயாம் மக்களுக்கு பயனாகவேணுமே!
பூவையின் இதழில் கோடிக் கவிதைகள் பிறந்தது அன்புப்பாதையிலே!
பார்வையில் படித்திடும் இலக்கியங்கள் உணர்வினில் பாடும் இதயங்களே!!
பல நாளின் கேள்விகளின் பதிலாகவே உயிரினில் கலந்திடும் உறவுகளே!
பாலுணர்வு மட்டுமே உலகம் என்று இருந்திருந்தால் வாழ்வு என்னாகும்!
வாழ்வுக்கும் அர்த்தமுண்டு வாழ்வதிலும் கருத்துண்டு இந்த உலகினிலே!
வாழுகின்ற உலகினிலே இல்லாமை இல்லாமல் வாழ்வதுதான் வாழ்வாகுமே!
ஏற்றதாழ்வு என்றானால் எல்லோரும் வாழும் வாழ்விங்கே கானலாகுமே!
தன்னலமே என்றிருக்கும் தான் தோன்றி நிலைமாற்றி உயர்வாக்கனுமே!
தனக்கென்று சேர்த்துவைக்கும் தனிச்சொத்துடைமை மாறிடவேணுமே!
தாய் நாட்டின் சொத்தெல்லாம் அதன்சேயாம் மக்களுக்கு பயனாகவேணுமே!