Popular Posts

Tuesday, May 31, 2011

தமிழ்பாலா/காதல்/கவிதை/சொற்சித்திரங்கள்/தத்துவம்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/-”,தோழர்,ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது,எமது படைப்புலக வாழ்த்துக்கள்!

மனித நேய,மக்கள் இலக்கிய அடலேறு,தோழர்,ராமகிருஷ்ணன் அவர்களுக்கு
எனது,எமது படைப்புலக வாழ்த்துக்கள்!

பதவிகளும்,பரிசுகளும்,பாராட்டுகளும் அனைத்தும் விருதுகளும் எல்லாம் -உம்
படைப்புலகை மென்மேலும் மெருகூட்டும் விழியாகட்டும்!~

Monday, May 30, 2011

தமிழ்பாலா-/காதல்/க்விதை/தத்துவம்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/சொற்சித்திரங்கள்/-”காதல் நினைவை தவிர ”

காதலியே .....
என் நினைவாக உன்னிடம் காதலன்பு ஒன்று உள்ளதடி!
ஆனாலும்
என்னிடம் உன்என் காதல் நினைவை தவிர வேறு ஒன்றும் இல்லையடி....

யார் என்னை விட்டு சென்றபோதும் ஒருபோதும் நானென்றும்
இம்மண்ணில் அழுததில்லையே!.......

ஆனாலும்

நீ என்னை விட்டு பிரிந்தபோது எந்தனுக்கே! நானென்றும்
அழாத நொடிப்பொழுதும் இவ்வுலகினில் இல்லையடி!

Sunday, May 29, 2011

!தமிழ்பாலா/-காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூ/ஐக்கூ/-மீண்டும் மீண்டும் காதல் பூபூக்கும்”

மீண்டும் மீண்டும்
காதல் பூபூக்கும்

உன்னொரு
புன்னகையால் மட்டுமே
மீண்டும் மீண்டும் காதல் பூபூக்கும்


உன் நினைவுகளைத்
சொல்லும் இரவுகளே!-எனக்கே நான்
செல்லும் இடம்தெரியாது பயணம்செய்யும் மாயமென்ன? மந்திரமென்ன?
அல்லும் பகலும் உன் நினைவில் நானும் தவிப்பதென்ன? தவிப்புமென்ன?

உன்
கொஞ்சும் மனதினிலே
மஞ்சம் கேட்டு கெஞ்சும் கோலமென்ன?


பசியில்லாத வாழ் நாளும்
பட்டினி இரவுகளும் எந்தனுக்கே
பழகிப் போனதடி

உனக்குள் கலந்துவிட்ட
வாழ்க்கைச் நீரூற்றினில் -அன்பு கொண்டு
என் வேர்கள் நீர்தேடுதடி

மீண்டும் மீண்டும்
காதல் பூபூக்கும்

உன்னொரு
புன்னகையால் மட்டுமே
மீண்டும் மீண்டும் காதல் பூபூக்கும்

தமிழ்பாலா/-காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூ/ஐக்கூ/-”கொட்டும் மழையில் எட்டிப் பார்க்கும் மஞ்சள் வெயிலே!

காதல் நிலவே கன்னி மலரே-தென்றல்
காற்றின் குளிரே சந்தன் மணமே!
கொட்டும் மழையில் எட்டிப் பார்க்கும்
மஞ்சள் வெயிலே!
….ஓடும் நீரில் முகம் பார்க்கும்
சிட்டுக் குருவியின் பரவசமே!…
என்னை நீயும்
உருகும் மெழுகில் உதிரும் விட்டில்போல்-காதல்
மனதினில் உருக்கிடும் மாயம் தான் என்ன?
கால் நனைத்த காலைப் பனியின்
ஈரம் கண்ணில்…தந்ததும் ஏனடி?
தரையில் விழுந்த மீனின்
துடிப்பு இதயத்தில்…தந்ததும் ஏனடி?-என் நினைவு தன்னையே! நீயும்.வெடித்துப் பறக்கும் பருத்தியைப் போல்வே!…
ஒரு நொடியில் வானவீதியில் சிறகின்றி பறக்க விட்டு
ஊனுமின்றி உறக்கமின்றி தவிக்கவிட்டதும் ஏனடியோ?
கொட்டும் மழையில் எட்டிப் பார்க்கும்
மஞ்சள் வெயிலே!
….ஓடும் நீரில் முகம் பார்க்கும்
சிட்டுக் குருவியின் பரவசமே!
உருகும் மெழுகில் உதிரும் விட்டில்போல்-காதல்
மனதினில் உருக்கிடும் மாயம் தான் என்ன?


/-”

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/அரசியல்/அனுபவம்/-ஹைக்கூ/ஐக்கூ/ இளமைச் சாரல் துளியே!

.
காதலர் நம்கை
விரல்களின் ஸ்பரிசத்தில்
பொழிந்தது காதல்மழையே!-குடை
காற்றினில் ஆடிடும் இடைவெளியினிலே!-அன்பினில்
கனிந்திடும் இளமைச் சாரல் துளியே!

நானும் நீயுமே
ஒரு குடையின் கீழே
கைவிரல்கள் கோர்த்தே
மெளனித்து நாமும் நடந்திடும்போதினிலே-காதலர் நம்கை
விரல்களின் ஸ்பரிசத்தில்
பொழிந்தது காதல்மழையே!

சிப்பிக்குள் ஒளிந்திருக்கும்
முத்தாகவே!காதலியே உந்தன்
கன்னக்குழிக்குள்
ஒளிந்திருக்கிறதே காதல் புன்னகையே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/அரசியல்/அனுபவம்/-ஹைக்கூ/ஐக்கூ/காதலிலே பூத்தபூவும் நீயல்லவா?-

ஏனடி ? ஏனடி? காற்றினிலே தேன்குடித்து தேனீக்கள் பற்ந்ததேன்னவோ?
பூவையே நீவந்து பேசுகையிலே!-அந்த
பூக்களுக்குத்தான் என்ன வருத்தமடியோ?-உனது
பார்வை மலரும் போதெல்லாமே!-எனது விழிகளே வண்ணத்துப்
பூச்சிகளாய் இமைச்சிறகடித்து பறந்திடுவதுதான் என்னவோ?!
மழையினில் நனைந்தாய் மேகத்தில் துவட்டினாய்!
வாசமுமுண்டு வாடுவதுமில்லை
காதலிலே பூத்தபூவும் நீயல்லவா?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/அரசியல்/அனுபவம்/-ஹைக்கூ/ஐக்கூ/-காலமெல்லாம் வாழ்கின்ற அன்புக் கவிதையாகவே!

நானும் எழுதிய
காதல் கடிதமிது- நானே வாழும்

காலத்திலேயே எழுதிடவேண்டும் என்று எண்ணிய
காலத்தின் வசந்தமிது~ காதல் கடிதமிது!
காதலியே உனக்கு
நானும் எழுதிய
காதல் கடிதமிது-
காதலியே நானுன்னை சந்தித்த நாள்முதலாகவே!
கண்களாலே எழுதிப் பழகிய பார்வையின் முகவரியிது!

காற்றினிலே கடுமழையினிலும் நடப்பதற்கே சிறகாலே நான் தடுமாறிய போது!-அன்பு
வானத்திலே பறந்திடவே எந்தனுக்கு கற்றுத்தந்தவள் நீயல்லவா?
வாழுகின்ற மனிதரெல்லாம் சதையாலே சேர்க்கப்பட்டவர் என்று நான்சொன்ன போதிலும்!
வாழும் மனிதரெல்லாம் மனித நேயத்தால் கட்டப்பட்டவர் என்று சொன்னவளே!

ஆகாய விண்மீன்கள் எல்லாம் இரவுபகல் அடையாளம் என்றுசொன்ன எந்தனுக்கே!-அந்த
அண்டத்தையே தொட்டுவிட என்னோடு சேர்ந்துவந்த பீனிக்ஸ் பறவை நீயல்லவா?-வாழ்வின்
கணக்கினை மட்டும் கணக்குப் பார்த்து வாழஎண்ணிய சராசரி மனிதன் நானல்லவா?
காலமெல்லாம் வாழ்கின்ற அன்புக் கவிதையாகவே என்னோடு வாழ்கின்றவள் நீயல்லவா?

நானும் எழுதிய
காதல் கடிதமிது- நானே வாழும்

காலத்திலேயே எழுதிடவேண்டும் என்று எண்ணிய
காலத்தின் வசந்தமிது~ காதல் கடிதமிது!
காதலியே உனக்கு
நானும் எழுதிய
காதல் கடிதமிது-







.