Popular Posts

Friday, August 6, 2010

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/சாதீயம் கொல்லுதடி!~ வறுமை நமைவாட்டுதடி! அதிகார வர்க்கத்தின் ஒடுக்குதலும் தொடருதடி!

சாதீயம் கொல்லுதடி!~ வறுமை நமைவாட்டுதடி!
அதிகார வர்க்கத்தின் ஒடுக்குதலும் தொடருதடி!
நாமெல்லாம் தூங்கிவிட்டால் புதியசமுதாயம் உருவாகிடுமோ?
நல்லோரின் வழிதனிலே நாமொன்றாய் நடந்திடுவோமே!

ஒழுக்கச் சிதைவுகளாலே! நற்பண்பும் போனதடி!
பிரிவினையின் பூசலிலே! மதவெறியும் கூடுதடி!
மனித இனத்தின் குறுகிய பார்வைகோஷ்டிப் பூசலானதடி!
உட்பகையினாலே உயிரிழப்ப்புகளும் ஆனதடி!

அரசியல் மோகத்தினாலே அனுதினமும் அடிதடி நடக்குதடி!
பதவிஆசையினாலே மனித நாகரீகம் தவிடுபொடி ஆனதடி!
பண ஆசையினாலே நல்லோரின் வழிமுறையும் மாறுதடி!
பண்பாடு மாறிப்போனால் நல்லரசு எப்படி உருவாகிடுமோ?

சாதீயம் கொல்லுதடி!~ வறுமை நமைவாட்டுதடி!
அதிகார வர்க்கத்தின் ஒடுக்குதலும் தொடருதடி!
நாமெல்லாம் தூங்கிவிட்டால் புதியசமுதாயம் உருவாகிடுமோ?
நல்லோரின் வழிதனிலே நாமொன்றாய் நடந்திடுவோமே!
தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/கங்கையின் வெள்ளமோ?அவளின் காதலன்பின் கரைபுரண்ட நெஞ்சமே!

காதலாலே! அமுதமென் மொழியாளே! குமுதவிழியாளே!
ஆனந்தக் கண்களிலே! நீர்சிந்திடவே!
உள்ளமோ நெகிழ்ந்து நெகிழ்ந்து உடலும் தளர்ந்து உள்ளாளே!-கங்கையின்
வெள்ளமோ?அவளின் காதலன்பின் கரைபுரண்ட நெஞ்சமே!

ஆஹாஹா!ஹாஹா ஹா! எனதன்புக் காதலியே !என்மனதினில் நின்று நின்று குழைகின்றாளே!தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/

எனதன்புக் காதலியே !என்மனதினில் நின்று நின்று குழைகின்றாளே!
அவள்மனதினில் இன்று இன்று குமுறுகின்றாளே!
காதலாலே காதலாலே! அவளின் குவளைமலர்க் கண்களே!
ஆனந்த நீர்சிந்துதே!ஆஹாஹா!ஹாஹா ஹா!
எனதன்புக் காதலியே !என்மனதினில் நின்று நின்று குழைகின்றாளே!
அவள்மனதினில் இன்று இன்று குமுறுகின்றாளே!

Sunday, August 1, 2010

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/தேன்சிந்தும் செம்மொழியாம் செந்தமிழின் அமுதாகவே இருக்கின்றசுகம் என்னசுகமோ?

தேன்சிந்தும் செம்மொழியாம் செந்தமிழின்
அமுதாகவே இருக்கின்றசுகம் என்னசுகமோ?
காதலனே!- அன்புக்
காதலனே!
இன்று வருவானோ? இல்லை நாளை வருவானோ? நானும் அறியேனே1
இல்லை மாற்று ஒன்று சொல்வானோ?-அவனையே
எனது நினைவினில் நிறுத்தி அன்புக்குள் அன்பாகி-
உயிரினில் உயிராகவே!
உள்ளத்தில் பயிராகவே!தேன்சிந்தும் செம்மொழியாம் செந்தமிழின்
அமுதாகவே இருக்கின்றசுகம் என்னசுகமோ?

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/ஏக ஜோதியே ஏக ஜோதியே ஏகஜோதியே காதலாம் பேரின்பஜோதியே!

ஏக ஜோதியே ஏக ஜோதியே ஏகஜோதியே காதலாம் பேரின்பஜோதியே!
ஜோதி ஜோதி ஜோதியே -காதல்
ஜோதி ஜோதி ஜோதியே -விழி
ஜோதி ஜோதி ஜோதியே - மன
ஜோதி ஜோதி ஜோதியே-அன்புப் பார்வை
காண ஜோதியே - இன்ப
காட்சி ஜோதியே -எழில்
வான ஜோதியே -இனிமை
ஆக ஜோதியே -இளமை
யோக ஜோதியே- உணர்வின்
ஆதி ஜோதியே - பருவ
நாத ஜோதியே -காதலரின்
காதல் ஜோதியே -உலகத்தின்
ஏக ஜோதியே ஏக ஜோதியே ஏகஜோதியே காதலாம் பேரின்பஜோதியே!
தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/உழைப்போரே நாமெல்லாம் பெறுவதற்கொ ஒரு பொதுவுடைமைப் பொன்னுலகம் உண்டென்று!

செயலாம் வினையே ஆடவர்க்கு உயிரென்று குறுந்தொகையும் கூறிடுமே!
எம்கடன் பணிசெய்து கிடப்பதே என்று அப்பரடிகளும் சொன்னாரே!செயல்தனையே!
கர்மயோகம் என்றே கீதையும் கூறிடுமே!
செயலையே வினையே வாழ்க்கை என்று புத்தனும் சொன்னானே!
உழைப்பினையே பெரிதாகவே எல்லாத் தத்துவ ஞானிகளும் சொன்னாரே!
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்றாரே பொதுவுடைமை ஆசானே!
உழைப்போரே ;உம்மிடத்து இழப்பதற்கு அடிமைவிலங்கு தவிர வேறொன்றுமில்லை என்றானே!
உழைப்போரே நாமெல்லாம் பெறுவதற்கொ ஒரு பொதுவுடைமைப் பொன்னுலகம் உண்டென்று!
மூலதன புத்தகத்தின் படைப்பாளனாம் காரல் மார்க்ஸ் அவனும் சொன்னானே!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/நன்றாய் தூய்மையாக்கியே, வெறும் மண்ணையும் க்ண்ணாடியாய்,பொன்னாய், உழைப்போரே மாற்றிடுவாரே!

நன்றாய் நொறுக்கியே,
நன்றாய் அரைத்தே ,
நன்றாய் மாவாக்கியே,
நன்றாய் கூழாக்கியே,
நன்றாய் சூடாக்கியே,
நன்றாய் தூய்மையாக்கியே,
வெறும் மண்ணையும் க்ண்ணாடியாய்,பொன்னாய்,
உழைப்போரே மாற்றிடுவாரே!
பொல்லாத பொறாமையும்,
பொல்லாத அவாவும்,
பொல்லாத வெகுளியும்,
பொல்லாத மனக்குற்றத்தையும்.
என்னாளும் நீக்கியே! தூய்மையாக்கியே!கெட்டமயக்கம்
என்ற இருளையும் நீக்கியே!மெய்யறிவினாலே!
அன்பு மனதினைக் கொண்டே!பகுத்தறிவினாலே கூடிய
அறியும் மெய்யாம் மெய்யறிவால் ஆன தவத்தின் படி நிலையாகுமே!
தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/