Wednesday, May 26, 2010
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/உண்மைக் காதல் அன்புபோலவே உனது அன்புள்ளம் என்ன?எங்களுக்கு ஒன்றும் புரியாததா?
தென்மேற்குப் பருவக்காற்றே! தென்மேற்குப் பருவக்காற்றே!-எங்களையே
தேடிவந்து உன்வரவினைச் சொல்லியே!-சன்னலின் கதவுகளையே நீயும்
ஓடிவந்து அன்புடனே தட்டுவதேனோ?
உன்வரவு எங்களுக்கு நல்வரவானதே!
உண்மைக் காதல் அன்புபோலவே உனது அன்புள்ளம்
என்ன?எங்களுக்கு ஒன்றும் புரியாததா?

தமிழ்பாலா-காதல்/கவிதை’தத்துவம்/தோழமை துணையிருக்கும் என்பதினாலே!
பார்த்துவா பார்த்துவா இளந்தென்றலே- நீவரும்
பாதையெங்கும் முட்காடுகளாய் இருப்பதினாலே!
சேர்ந்துவா சேர்ந்துவா என் தோழனோடு-
வரும்பாதை தோறும் உந்தனுக்கு எந்தன்
தோழமை துணையிருக்கும் என்பதினாலே!

Sunday, May 16, 2010
அன்புமழை பொழிகின்ற உன்னிதயத்தில் எனக்கு இடமுண்டோ?
எறும்புகளிடம் தான்கேட்டிடவேண்டும் சேமிப்பின் இலக்கணத்தையே!என்னருமைக் காதலியே
உன்னிடம்தான் கற்றிடவேண்டும் காதலின் தத்துவத்தையே!
அரும்புகளாய் குறும்புகள் செய்யும் வசந்த காலங்களே
அன்புமழை பொழிகின்ற உன்னிதயத்தில் எனக்கு இடமுண்டோ?
பூவாய் மலர்ந்தது தளிராய் மிளிர்ந்தது காதலடி
புன்னகை சிந்திடும் தாமரைக் குளத்தினில் மோதுமடி
கூழாங்கல்லிலும் குடியிருக்கும் அழகுக் காதலடி
கூடிப் பறந்திடும் வண்டுகள் இதயத்திலும் ஓடுமடி

Tuesday, April 27, 2010
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஒண்ணுசேந்த நெஞ்சுக்குள்ளே காதல் வந்து சிரிக்குதடா-சமுதாய வாழ்விலுமே ஒண்ணுசேந்து நின்னா நாடும் செழிக்குமடா!
சாயச் சருகைச் சேலை உடுத்திவந்த என்மாமன் மகளே!உனக்கே
சாத்தாங்குடி கம்பிச் சேலை எடுப்பா இருக்குமடி-
உருகி நானே உடுத்திவந்த
ஊதா கருப்புச் சேலை உனக்கே பிடிக்கலையோ? என் அத்தை மகனே!-
நீயும்
அன்ன நடை நடந்து ஆசாரக் கைவீசி கண்சிமிட்டி நடக்கையிலே!
உன்ன பார்த்த நாள்முதலாய் என் ஜீவன் உன் ஜீவன் ஆனதடி-பருவப்
பச்சை மணக்குதடி பாதகத்தி உன்மேலே நானே
இச்சை கொண்ட காலமெல்லாம் ஏங்கிமனம் வாடுறண்டி!
ஒண்ணுசேந்த நெஞ்சுக்குள்ளே காதல் வந்து சிரிக்குதடா-சமுதாய
வாழ்விலுமே ஒண்ணுசேந்து நின்னா நாடும் செழிக்குமடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/விதிதனை எண்ணி வீழ்ந்து கிடக்கும் மனிதர்களே!- நம் மதிதனை பகுத்தறிவினாலே எண்ணிட மறந்தது ஏனோ?
விதிதனை எண்ணி வீழ்ந்து கிடக்கும் மனிதர்களே!- நம்
மதிதனை பகுத்தறிவினாலே எண்ணிட மறந்தது ஏனோ?
உழைக்கின்ற அளவிற்கு ஊதியம் வேண்டுவது இயற்கைவிதி ஆகுமடா!
அதிலும் வேறுவிதி உண்டோ? வீணர்களே!

இல்லாமை இருப்பதையே எதிர்த்து போராடி வெல்லும் பொன்னுலகம் காணுமடா!
இருப்பவனே தந்திடவே மாட்டானே -அவனை
இல்லாதவனே விட்டிடவே மாட்டானே
ஓடப்பன் உயரப்பன் ஆயிடவே எல்லாமே ஒப்பப்பன் ஆயிடவே-மார்க்சீய
தத்துவமே மார்தட்டி வருகுதடா!சிரமேற்கொண்டு வாழ்வினில் உயர்ந்தோங்கடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதலித்துப் பாரு காதலித்துப் பாரு- உன்னையே நீயே காதலித்துப் பாரு!
காதலித்துப் பாரு காதலித்துப் பாரு- உன்னையே நீயே
காதலித்துப் பாரு காதலித்துப் பாரு-
உன்னையே நீயே காதலித்துப் பாரு-
உன்னையே நீயே
காதலித்துப் பார்த்தால் காதலித்துப் பார்த்தால்
காதலியே நானே ஏதுக்கடா?
நானந்த அர்த்தத்திலே சொல்லவிலை என்னருமைக் காதலியே
வாழ்வினில் முன்னேற உன் நம்பிக்கைதனையே
வளர்ப்பதற்கே நான்சொன்ன கருத்துதாண்டி!
முன்னேறும் வழிதனையே சொன்ன என்னருமை ஆசை காதலனே!- நாடும் நாமும்
முன்னேற என்னதான் போராட்டம் நீயும் செய்தாயோ?
ஆணும் பெண்ணும் சேர்ந்து போராடினால் தானே பொன்னுலகம்
அருகாமையில் இருக்குதடி என்னாசை காதலியே!
யாரை எதிர்த்து? தனியுடைமை கொடுமை எதிர்த்து
யாருக்காக? நம் மக்களுக்காகவே!

Subscribe to:
Posts (Atom)