நான் யார்? என்னை நீங்க ஏன் காப்பத்தணும்? என்னை காப்பத்தலைனா நீங்க எப்படி வாழ முடியும்? நான் நான் நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு எனும் பஞ்ச பூதங்களை கொண்ட இயற்கை.
நான் இப்போது மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறேன். என்னை உடனே காப்பாற்றவில்லை என்றால் நீங்களும் என்னோட அழிய வேண்டியது தான். நான் உங்களுக்கு என்ன குறை வைத்தேன்? உங்களுக்கு என்ன கொடுக்கவில்லை? உங்கள் அனைவரையும் ஏன் உங்கள் பாட்டன் முப்பாட்டன், முப்பாட்டனுக்கு முப்பாட்டன், பாட்டி, முதல் உயிரினம் முதல் இன்று இப்போது பிறந்த பிறக்கும் உயிர்களுக்கும் என்னை விட்டால் யார் அவர்களை காக்க முடியும்?
ஏன் இப்படி பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள் நான் ஆரம்ப காலத்தில் இருந்ததை போல இப்போது இல்லை, என்னால் தூய்மையாக இருக்க முடியவில்லை, காரணம் நீங்கள் தான் என்னை பாழ்படுத்தியதே நீங்கள் தான். என்னால் உங்களுக்கு அளிக்கப்பட்ட கொடை, பரிசு எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள் நீர், தண்ணீர், ஆறாக உருவெடுத்து உங்களுக்கு தாகத்தை தீர்ப்பதற்கும், விவசாயம் பார்த்து உணவு கொடுக்கவும் எது இருந்தால் முடியும் தண்ணீர். என்னுள் ஒரு பகுதியான ஆற்று தண்ணீர் இப்போது உங்களால் கழிவுகள் கலக்கப்பட்டு, வேதியியல் மாற்றங்களால் உங்களுக்கே நஞ்சாக போகிறது.
புதுவிதமான மாற்றங்கள் என்னுள் நான் அழிந்து கொண்டு இருக்கிறேன். இதனால் என்னை பருகும் நீங்கள் புதுவிதமான நோய்களுக்கு ஆட்படுகிறீர்கள். நானா என்னுள் கழிவுகளை போட்டுக்கொண்டேன்.
யாராவது தாகத்திற்கு தண்ணீர் கொடுத்தவரை கொன்று புதைப்பானா? நீங்கள் என்னை புதைக்க குழி தோண்டி கொண்டிருக்கிறீர்கள். நான் அழியப்போகிறேன். என்னுள் ஏற்பட்ட இந்த பல வேதியியல் மாற்றங்களால் நான் உங்களையும் சேர்த்து அழிக்கபோகிறேன்.
என்னுள் மற்றொரு பகுதியான நிலம் அய்யோ சொல்லவே மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் மரங்களால் நிறைந்து காணப்பட்டால் உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது. நான் என்னால் தூய்மையான காற்று தருவேன். நீங்கள் நிம்மதியாக சுவாசிக்கலாம். ஆனால்,
நான் காங்கிரீட் மரங்களாக (கட்டிடங்கள்) உருமாறினால் எங்கே நான் மரங்களை கொண்டிருப்பது. என்னால் நிலத்தடி நீரை இனியும் உங்களுக்கு தர முடியுமா?
நான் உங்களை தான் கேட்கிறேன். என்னுடைய மற்றொரு பகுதி ஆகாயம் என்னுள் உங்களை காப்பதற்காக அமைந்திருந்த ஓசோன் படலத்தில் நீங்கள் தான் ஓட்டை போட்டீர்கள். மாசடைந்த காற்றால் நான் நாசமடைந்தேன். வாக புகை, தொழிற்சாலை புகை, இன்னும் எவ்வாறெல்லாமோ என்னுள் ஒரு பகுதி காற்று மாசடைந்து சீர் கெட்டு போய்விட்டது. காற்று இல்லாமல் நீங்கள் ஒரு ஐந்து நிமிடம் உயிர் வாழ முடியுமா? ஏன், ஒரு நிமிடம் இருக்க முடியுமா?
நான் தூய்மையிழந்து போய்விட்டேன். காப்பாற்றுங்கள்!
உங்களால் என்னுள் ஒரு பகுதி மட்டும் விஸ்வரூபம் எடுத்து கொண்டு இருக்கிறது நெருப்பு! ஆ! ஆ! ஆ! ......
எனக்கு எரிகிறது நான் சூடாகிறேன். என்னால் தாங்க முடியவில்லை, என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய உங்களை சும்மா விடமாட்டேன்.
வருகிறேன்! உங்களை அழிக்க வெள்ளம், வறட்சி, பூகம்பம், சுனாமியாக வருகிறேன்! வந்து கொண்டே இருக்கிறேன்!
ஒரு வாய்ப்பு நான் இறுதி கட்டத்தில் இருக்கிறேன். இப்படி இந்த என் நிலைக்கு நானா காரணம்? சரி போகட்டும் கடைசி வாய்ப்பு என்னை காப்பாற்று! என்னால் உன்னை காப்பாற்ற முடியாதா என்ன? நான் பழைய தாய்மை நிலைக்கு வந்தால் நானும் வாழ்வேன் என்னால் நீயும் வாழ்வாய்! என்னை காப்பாற்றுவாய் என்று நினைக்கிறேன்?!?
1 comment:
இயற்கையை காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். நம் சந்ததியினர் வாழ்வு நலமாக நாம் தூய்மையான இயற்கையை அளிப்பது நம் ஒவ்வொருவரின் கடமையே என்பதில் சிறிதும் ஐயமில்லை.
Post a Comment