Popular Posts

Thursday, December 11, 2008

பூ விமர்சனம்


அழகான ஓவியத்தை மேலும் அழகு படுத்தி தந்த இயக்குனர் சசி அவர்களுக்கு ஒரு பூ என்ன? ஒரு பூந்தோட்டமே கொடுக்கலாம்.
இப்படியும் ஒரு பெண்ணா? என வியக்கிறோம். நாம் படத்தை பார்த்து விட்டு வந்தாலும் மாரி (பார்வதி)யின் முகம் நம் உள்ளத்தை விட்டு அகல சில நாட்கள் வேண்டும். மாரியாக நடித்த பெண் புது முகமா? இல்லை ஷோபா பிறந்து வந்து விட்டாரா? என வியக்க தோன்றுகிறது. நாம் அனைவரும் ஒரு காவியத்தை குறை சொல்லி அதன் சின்ன சின்ன குறைகளை பெரிது படுத்தாமல் அதன் நிறைகளை பார்த்து அந்த கலைஞர்களுக்கு ஊக்கம் கொடுத்தாலே இது போன்ற படைப்புகள் நம் தமிழ் சினிமாவை உயர்த்தும். பூ படத்தின் அனைத்து அறிமுக கலைஞர்களுக்கும் பாராட்டுகள். கதையை நான் சொல்வதைவிட நீங்களே படத்தை பார்த்து எனக்கு பதில் சொல்லுங்கள். படத்தின் கதாநாயகன் கதையும் கதாநாயகியும் ஆகும்.

No comments: