Popular Posts

Wednesday, July 7, 2010

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/வாழ்க்கையிது வாழ்க்கையடா! உடலோடு உடல்சேரும் உடற்புணர்ச்சி மட்டுமல்ல!

வாழ்க்கையிது வாழ்க்கையடா!
உடலோடு உடல்சேரும் உடற்புணர்ச்சி மட்டுமல்ல!
வாழ்க்கையிது வாழ்க்கையடா!-உயிரும் உடற்புணர்வினில் மட்டும்
சேர்ந்து நிறைவும் கொள்வது இல்லையடா!
வாழ்வினில் மனப்புணர்ச்சியிலும் அதன்மூலம் உயிர்
வாழ்த்தும் உயிர்ப்புணர்ச்சியிலும் ஒன்றுபடுவதே வெற்றிகாணும்
காதலின்ப மயமான வாழ்க்கையடா!
வாழ்வினில் உடற்புணர்ச்சியே படிப்படியாகவே குறைந்து உயிர்
வாழ்வின் புணர்ச்சியாகி முடிவினில் அகமே முழுவதுமாகுமே!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/காதல் மென்மையானது!

காதல் மென்மையானது!
காதல் உண்மையானது!
காதல் திண்மையானது!
காதல் நுன்மையானது!

காதல் மென்மையானது!
கண்ணுக்குத் தெரியாத அணுக்களினாலே!
தாக்கும் மூச்சுக் காற்றினைவிட!
காதல் மென்மையானது!
ஆதவனின் ஒளிக்கதிரினாலே கனலாக்கும் கண்ணின்
பார்வையைவிட
காதல் மென்மையானது!
காதல் உண்மையானது!
காதல் திண்மையானது!
காதல் நுன்மையானது!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/-காதலில் ஊடலும் வேண்டுமடி! கூடலும் வேண்டுமடி!

காதலி தருகின்ற அமுத மழையாம் !
காதலின்பத்தையே!முழுமையாகவே !சுவைத்திடவே!-காதலில்
ஊடலும் வேண்டுமடி! கூடலும் வேண்டுமடி!என்றும்
இனிக்கின்ற உப்பினைப் போலவே!ஈருடல் ஓருயிர் ஆகிடும் புணர்ச்சியிலே!
காதற்களத்தில் உடல் நீர் வியர்த்து வெளியே வந்ததே!
காதலில் இந்த இன்ப இனிக்கின்ற உப்பினையே!
காதலனும் காதலியும் இனிதே பெற்றாரே!-வாழ்வினில்
காதல் பேரின்பமானதே!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/ புன்னகையாலே அச்சம்தரும் இரவைக்கூட மாற்றி பகலாகவே ஆக்கிடவேணும்!

நீயும் சிரித்து வாழவேணும்-உன்னைச்
சேர்ந்தவரையும் சிரிக்கவைத்து வாழவேணும்!-உனது மனப்
பூர்வமான புன்னகையாலே அச்சம்தரும் இரவைக்கூட
மாற்றி பகலாகவே ஆக்கிடவேணும்!

Friday, July 2, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/வரும் தலைமுறைக்கே நீவிட்டுச் செல்வது உனது நல்ல செயல்கள்தானே!

கடந்துவிட்டது கடந்துவிட்டது கடந்த காலமே கடந்துவிட்டது!
வரும்காலமோ சந்தேகமானது வரும்காலமோ சந்தேகமானது!-அதனாலே நீயும்
வாழும் காலத்திலேயே நல்லசெயல்களையே செய்திடவேணுமே!
வரும் தலைமுறைக்கே நீவிட்டுச் செல்வது உனது நல்ல செயல்கள்தானே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/பண்பில்லாத மனிதரிடத்தே சுதந்திரம் எப்படி இருக்கும்?

பண்பில்லாத மனிதரிடத்தே சுதந்திரம் எப்படி இருக்கும்?
படிப்பில்லாத தேசத்திலே வறுமை இல்லாமல் எப்படி இருக்கும்?
அன்பில்லாத வாழ்வதிலே இன்பம் எப்படி குடியிருக்கும்?
அறிவில்லாத ஞானசூன்யத்திற்கு நல்லது கெட்டது எப்படித் தெரியும்?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/படிக்க முடியாத ஏழைக்கும் அனுபவ அறிவு கூடுமடா!

கொடுக்கமுடியாத கடன்காரன் கிட்ட கெடைச்சமட்டும் ஆதாயமடா!
நடக்கமுடியாத கிழவனுக்கு நாக்குத் தாண்டா மிச்சமாகுமடா!
பார்க்கமுடியாத மானுடத்துக்கு கேள்வி ஞானம் அதிகமடா!
படிக்க முடியாத ஏழைக்கும் அனுபவ அறிவு கூடுமடா!