Wednesday, October 26, 2011
வாழும் வாழ்க்கையிலே!
சொல்லில் இனிமைவேணும்!
செயலில் உறுதிவேணும்-வாழும் வாழ்க்கையிலே!
கொள்கையில் தெளிவுவேணும்!இம்மண்ணிலே
இம்மூன்றும் ஒன்றிணைந்தால்
எவரும் எதையும் சாதிக்கலாமே!
Monday, October 17, 2011
மாற்றம் என்றும் மாறுவதுண்டோ?
காலம் ஒருகோலம் போட்டதே!-அதுவும்
கண்ணீரில் கரையாமல் போனதே!\
நானும் நீயும் சேர்ந்தே-என்றும்
காணும் பேரின்பம் அன்பே!~-அதுவே
காதலே என்றால் மிகையாமோ?
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகுந்ததே!
ஏட்டினில் சொன்னது கொஞ்சமடி தோழியே!!-உன்
கண்ணும் என்கண்ணும் சேர்ந்த போதிலே!
காணும் இன்பத்திற்கே ஓர் எல்லையுண்டோ?
மாற்றம் என்றும் மாறுவதுண்டோ?வாழ்வில்
ஏமாற்றம் என்பது தொடர்வதுண்டோ?-மனிதத்
தோற்றம் குரங்கில் இருந்தன்றோ?அதுவும்
மாறிவந்த பரிணாம வளர்ச்சி அன்றோ?
Subscribe to:
Posts (Atom)